Blogger இயக்குவது.

கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் வழங்கக் கூடாது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சனி, 6 அக்டோபர், 2012

கடலூர்:

    தமிழகத்தைப் பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபடும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தைத் தரக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
 
      தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூர் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை 04/10/2012 அன்று  நடந்தது.

   கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலர் தி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் ரா.பஞ்சமூர்த்தி, வ.சின்னதுரை, மு.முடிவண்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நகர செயலர் ஆனந்த் வரவேற்றார். மாநில நிர்வாக குழு தி.திருமாவளவன், ராஜேந்திரன், மதியுரைக்குழு உறுப்பினர்கள் ராச.தாண்டவராயன், மு.பாலகுருசாமி, மாநில மகளிரணி துணைச் செயலர் அமராவதி, மாணவரணி தலைவர்கள் ரவி, பிரகாஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


 1. நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும்.

2. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டிப்பது, 

 3. தொடர்ந்து 400 நாட்களாகப் போராடும் கூடங்குளம் மக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் காவல் துறையை ஏவி தாக்கியதைக் கண்டிப்பது,

4. சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடுக்கு வழிவகுத்த மத்திய அரசைக் கண்டிப்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP