Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் என்.எல்.சி. முதல் அனல் மின்நிலையம் முற்றுகைப் போராட்டம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012






நெய்வேலி:



   தமிழகத்துக்கு காவிரியில் நீர்விட மறுக்கும் கர்நாடகத்துக்கு என்.எல்.சி.யில் இருந்து மின்சாரம் வினியோகிப்பதை நிறுத்தவும், தமிழகத்துக்கு முழுமையாக மின்சாரம் அளிக்கவும் வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம் முற்றுகையிடப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

         அதன்படி 20/10/2012 சனிக்கிழமை  காலை யில் நெய்வேலி புதுநகர் 19-வது வட்டத்தில் உள்ள செவ்வாய்சந்தை பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திரண்டனர். நெய்வேலி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண், பெண்கள் வேன், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்தனர்.

          மழை பெய்தபோதும் திட்டமிட்டபடி தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் என்.எல்.சி. முதலாவது அனல் மின்நிலையம் நோக்கி  பல்லாயிரக்கணக்கானோர்  பேரணியாக சென்றனர். ஊர் வலத்தின்போது கர்நாடக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. பேரணியில் கட்சியின் பொது செயலாளர் காவேரி, மாநில தலைவர் பேராசிரியர் தீரன், அமைப்பு செயலாளர் காமராஜ், இணை பொது செயலாளர் சண்முகம் உள்பட கட்சி பிரமுகர்கள், கடலூர் மாவட்ட நெய்வேலி நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

           நெய்வேலி என்.எல்.சி. முதல் மின்நிலையம் அருகே உள்ள “கியூ” பாலம் பகுதியில் ஊர்வலம் சென்ற போது தடுப்பு கட்டைகள் உதவியுடன் போலீசார் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP