Blogger இயக்குவது.

காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம்

வியாழன், 4 அக்டோபர், 2012

   



காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று 04/10/2012 காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.


இது குறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொது செயலாளருமான பெ.மணியரசன் கூறியது,


 கர்நாடகாவில் தற்போதைய நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய 4 அணைகளின் மொத்த கொள்ளளவான 116 டிஎம்சியில் 100 டிஎம்சி தண்ணீர் உள்ளது. ஆனால் அங்கு தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு பொய் சொல்லி வருகிறது.


             காவிரி நதியில் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெறுவதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல், மக்கள் விடுதலை), சிவசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம், சின்னச்சாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கங்கள், தமிழக உழவர் முன்னணி, கொள்ளிடம் விவசாயிகள் சங்கம், தாளாண்மை உழவர் இயக்கம் உட்பட 30க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளை கொண்ட காவிரி உரிமை மீட்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

       காவிரியில் இருந்து வரும் 30ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் இன்று முதல் துவங்குகிறது என்றார்.

திருவாரூர்:

காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று காலை திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய பல்வேறு சங்கங்களை சேர்ந்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர், தினமும் தமிழகத்துக்கு 2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம்:

சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.40 மணிக்கு கூடிய காவிரி உரிமை மீட்பு குழுவினர், நாகூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதில் இன்று காலை குபேரன் தலைமையில் தமிழக இளைஞர் முன்னணியினர் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP