சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து நவம்பர் 15 - ல் உண்ணா விரத போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்க முடிவு
ஞாயிறு, 11 நவம்பர், 2012
சிதம்பரம்:
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆட்குறைப்பு, ஊதியம் குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து நவம்பர் 15ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகம் நிதி நிலைமையைச் சமாளிக்க ஆள் குறைப்பு மற்றும் ஊதிய குறைப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பல்கலை நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை அண்ணாமலை நகரில் நடந்தது. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பல்கலைக் கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் மதியழகன், பொதுச்செயலர் ரவிச்சந்திரன், கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயசந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரமகுரு, தி.மு.க., அவைத்தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் வெங்கடேசன், தே.மு.தி.க,., மாவட்ட செயலர் சபாசசிகுமார், நகர செயலர் சந்தானகிருஷ்ணன், பா.ம.க., திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர் கருணா, நகர செயலர் முத்துக்குமார், மா.கம்யூ., மாநிலக்குழு மூசா, நகர செயலர் ராமச்சந்திரன், கற்பனைச்செல்வம், இந்திய கம்யூ., செயலர் சேகர், வட்ட செயலர் பூபாலன், ம.தி.மு.க., வழக்கறிஞர் மோகனசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ள ஆட்குறைப்பு மற்றும் ஊதியம் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடவேண்டும்.
2. இப்பிரச்னையில் சமூக நிலை ஏற்பட தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
3. பல்கலைக் கழக நிர்வாகத்தின் ஆள் குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள், அனைத்துக் கூட்டமைப்புகள், அனைத்து சங்கம், வணிகர்கள், பொது மக்கள் சேர்ந்து வரும் 15ம் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக