Blogger இயக்குவது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து உண்ணா விரத போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு

வெள்ளி, 16 நவம்பர், 2012

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வை பாதிக்கும் ஊதியம் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடக் கோரி அனைத்து கட்சி சார்பில் சிதம்பரத்தில் நவம்பர் 15  அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

      கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 7ம் தேதி அதிகாரிகளுடன்துணைவேந்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.நிதி நிலையை சமாளிக்க ஆட் குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு போன்றவற்றை செயல்படுத்த இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து பல்கலைக் கழக ஊழியர்களிடையே போராட்டம் வெடித்தது. இதனால் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

         பல்கலைக் கழகம் கடுமையான நிதி சிக்கலில் இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர் களுக்கு வரும் மாதங்களில் சரிவர ஊதியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்து துறை புல முதல்வர்கள், தலைவர்கள், இயக்குனர், தொலை தூரக்கல்வி இயக்ககம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பதிவாளர் மீனாட்சிசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பினார்.இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே  நவம்பர் 15 ல் நடந்தது.

         மா.கம்யூ., எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்,  தி.மு.க., நகர செயலர் செந்தில்குமார், அவைத்தலைவர் தென்னவன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், மாவட்டச் செயலர் செல்லப்பா, நகர செயலர் கோவி தில்லைநாயகம், காங்., டாக்டர் வள்ளல்பெருமான், சரவணகுமார், தே.மு.தி.க., மாவட்டச் செயலர் சபா சசிக்குமார், நகர செயலர் விஜயகுமார், பா.ம.க., மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன், நகர செயலர் முத்துகுமார், மா.கம்யூ., நகர செயலர் ராமச்சந்திரன், இந்திய கம்யூ., மாநிலக் குழு மணிவாசகம், நகர செயலர் சேகர், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலர் செல்வராசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார், துரை சரவணன்மற்றும் சங்கங்கள், வணிக அமைப்பு நிர்வாகிகள், அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

           போராட்டத்தில் பேசிய தலைவர்கள், நிர்வாகம் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிடவேண்டும். பல்கலைக் கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும். அரசு இப்பிரச்னையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். சிண்டிகேட் கூட்ட முடிவிற்கு பின் தொடர் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். எந்தவித நடவடிக்கையும் இல்லையெனில் பல்கலைகழகத்தை அரசுடமையாக்க சட்டம் கொண்டு வர அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தி பேசினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP