கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பிரசாரம்
ஞாயிறு, 20 ஏப்ரல், 2014
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க
வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் நெய்வேலி
மத்திய பேருந்து நிலையம் அருகில் 19.04.2014 (சனிக்கிழமை) அன்று தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து
கொண்டு வாக்கு சேகரித்தார்.
பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, சின்னதுரை முன்னிலை வகித்தனர். அமைச்சர் எம்.சி.சம்பத், சட்ட மன்ற உறுபினர்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், வேட்பாளர் எ.அருண்மொழித்தேவன் ஆகியோர் பேசினர்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:
தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று கூறி வந்த ராமதாஸ் தேசிய கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளார். தனிதமிழ் ஈழம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், மீனவர் பிரச்னை, கச்சத் தீவை மீட்பது, தனி ஈழம் என்று சொன்னார் வைகோ. ஆனால் இன்று அவர் கூட்டணி சேர்ந்துள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அவை எதுவும் இடம்பெறவில்லை. ஜெயலலிதாவை வன்னியர்களுக்கு எதிரி எனக் கூறும் ராமதாஸ், இதுவரை ராமசாமி படையாச்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுண்டா. ஆனால் ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை எழுப்பியது ஜெயலலிதா என்பதை ராமதாஸ் மறந்துவிட்டுப் பேசுகிறார்.
தமிழ் சமுதாயத்தின் விடியலுக்காக களம் வந்தவர் முதல்வர் ஜெயலலிதா. எனவேதான் நான் அவரை ஆதரிக்கிறேன். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானங்களை துணிச்சலுடன் கொண்டுவந்தார். முதல்வர் ஜெயலலிதா ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பாடுபடவேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக