Blogger இயக்குவது.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

திங்கள், 7 ஏப்ரல், 2014

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கபிஸ்தலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்த கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சில்லத்தூர் ஆர்.பி. தமிழ்நேசன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் முகமது ஆரிப் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம், வடக்கு மாவட்ட தலைவர் முருகன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் தியாக. அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

உலகத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். அவர்களின் உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டும். தமிழர்களின் உரிமைகள் பறிபோய் கொண்டு இருக்கிறது. இதனை நாம் காப்பாற்ற வேண்டும். தமிழர்களின் தன்மானம் காக்கப்பட வேண்டும்.

கச்சத்தீவை மீட்டெடுக்க, காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, ஈழப்பிரச்சினைக்கு முடிவுகட்ட ஒரே வழி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவுடன் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நிறுத்தப்பட்டு உள்ள அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாம் இந்தியாவின் பிரதமராக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு நிரத்தர தீர்வு கிடைக்கும்.

காங்கிரஸ், பாஜ.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, உள்ளிட்ட கட்சிகள் மக்களை பற்றி எந்த நேரத்திலும் கவலைப்படாத கட்சிகள். இவைகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து கொள்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கட்டுப்பாட்டோது கட்சியை வழி நடத்தி வரும் அ.தி.மு.க. கட்சி தமிழர்களையும், தமிழனின் மானத்தையும் காப்பாற்றும் கட்சியாகும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் அதனை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை. இலங்கை பிரச்சினைக்காக அவர் உண்ணாவிரதம் இருந்தார். கொடியவன் ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால் காவேரி பிரச்சினையில் என்ன செய்தார். கருணாநிதி என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தான்.

மீத்தேன் எரிவாயு திட்டத்தை கொண்டு வந்தது டி.ஆர்.பாலுவும், மு.க.ஸ்டாலினும்தான். இவர்கள் 2 பேரும் தான் இதற்கு ஒப்பந்தம் போட்டனர். தற்போது மறுக்கின்றனர். மீத்தேன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கருதி விவசாயிகளை காப்பாற்ற எதிர்த்து போராடி வருபவர் ஜெயலலிதா.

தூக்கு தண்டனை அறிவித்த சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்தவர் ஜெயலலிதா. இவரால் மட்டும் தான் இந்திய நாட்டையும், உலகத்தில் உள்ள தமிழர்களையும், நம் தமிழ் இனத்தையும் காப்பாற்ற முடியும்.

எனவே வருகிற நாடாளு மன்ற தேர்தலில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்டபாளர் ஆர்.கே. பாரதிமோகனை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP