கல்லூரி, பள்ளி வாகன ஓட்டுநர்களாக குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேற்பட்ட, 10 ஆண்டு அனுபவமிக்கவர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம்
புதன், 22 ஏப்ரல், 2015
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாகக் கூறி சுட்டுக்கொலை செய்யப்பட்ட 20 அப்பாவி தமிழர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், அவர்களை சுட்டுக்கொலை செய்த ஆந்திர காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும், அண்மையில் திட்டக்குடி பகுதியில் கல்லூரி வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். கல்லூரி, பள்ளி வாகன ஓட்டுநர்களாக குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேற்பட்ட, 10 ஆண்டு அனுபவமிக்கவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திட்டக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக