Blogger இயக்குவது.

சிங்கள ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை கோரிக்கை

திங்கள், 21 அக்டோபர், 2013

கடலூர்:

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை (20.10.2013) நடைபெற்றது. 
மாவட்ட மாணவரணி தலைவர் ப.மாரியப்பன் தலைமை வகித்தார். மாணவரணிச் செயலாளர் சி.ராம்ஜி வரவேற்றார். மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் க.குமரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவபுரி அ.சிவா, நகரச் செயலாளர் கோவி.தில்லைநாயகம், நகர துணைத் தலைவர் எஸ்.சுகுமார், நகர இளைஞரணி செயலாளர் தில்லை மற்றும் நிர்வாகிகள் ரா.ஹரிஹரன், த.விஜய், மு.புருஷோத்தமன், பா.மூர்த்தி, சுகுமார், சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். மாவட்ட துணைத் தலைவர் மு.புருஷோத்தமன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரோ அல்லது பிரதிநிதிகளோ பங்கேற்கக் கூடாது,

2. சிங்கள ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள 60 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP