Blogger இயக்குவது.

தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு தினம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வீரவணக்கம்

புதன், 30 ஜனவரி, 2013

             இந்திய – சிங்கள அரசுகள் கூட்டாக நடத்திய தமிழீழ இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி, 2009 சனவரி 29 அன்று, சென்னையிலுள்ள இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் முன் தீக்குளித்து உயிரீகம் செய்த மாவீரன் முத்துக்குமாரின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் 29.01.2013 அன்று தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது.  அந்நாள், தமிழீழ இன அழிப்புப் போரை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழ விடுதலை வேண்டியும் உயிரீகம் செய்த ஈகியர் அனைவரையும் நினைவு கூரும் நாளாகவும் கடைபிடிக்கப்படுகின்றது.
         சென்னையில் தழல் ஈகி முத்துக்குமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழீழ விடுதலைக்காக உயிரீஈகம் செய்த 22 ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில், 22 அடி ஈகியர் நினைவுத் தூண் சென்னை கொளத்தூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 29.01.2013 காலை 9.30 மணயளவில், ஈகி முத்துக்குமாரின் தங்கை திருமதி தமிழரசி குடும்பத்தார் உள்ளிட்ட பல ஈகியரின் குடும்பத்தினர் திரண்டிருந்தனர். காஞ்சி மக்கள் மன்றம் சாபில், தோழர்கள் மகேசு – ஜெசி ஆகியோர் தலைமையில் கொண்டு வரப்பட்ட ஈகியர் நினைவுச்சுடர் அங்கு ஏற்றப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு தி.வேல்முருகன், இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு வன்னியரசு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அதியமான், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தமிழின உணர்வாளர்களும் அங்கு வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை நகர த.இ.மு. செயலாளர் தோழர் வினோத் உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர். இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்திருந்தார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா

சனி, 26 ஜனவரி, 2013

விழுப்புரம்:

      விழுப்புரத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா 25/01/2013 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.ரவி அலெக்ஸ் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்கள் கிழக்கு ஆர். குமரன், மேற்கு ரா.சசிக்குமார் முன்னிலை வகித்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

  ஈழத் தமிழர்களிடத்தில் அரசியல் தீர்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். குறைந்தபட்சம் அதற்காகவாவது நாம் போராட வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரி நதிநீர் விவகாரம், முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகளில் சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழர்களாய் ஓரணியில் திரள்வோம்!















Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா, விழுப்புரம் (25.01.2013) - அழைப்பிதழ்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் மற்றும் மத்திய அரசின் தொடர் தமிழின விரோதப்போக்கை கண்டிக்கும் விதமாக வருகின்ற வெள்ளியன்று (25-1-2013) விழுப்புரத்தில் ரங்கநாதன் சாலையில் கல்யாண் திரையரங்கம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. 

எழுச்சியுரை:  தி.வேல்முருகன் 





Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்து வந்த பாதை - பகுதி 2

திங்கள், 21 ஜனவரி, 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்து வந்த  பாதை - பகுதி 2

* அரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் முன்னிலையில் பா.ம.க.,விலிருந்து விலகி 100 பேர்  12/03/2012 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.

* கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பதிலாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

* ஸ்ரீமுஷ்ணத்தில் 01/04/2012 திங்கள்கிழமைஅன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம்  நடைபெற்றது. அப்போது  நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால் நான் தொடங்கிய கட்சியைக் கலைத்து விடுகிறேன் என தி.வேல்முருகன் சவால் விடுத்தார். 

* தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தென்பெண்ணை, காவிரி மற்றும் முல்லை பெரியாறு நீர் உரிமை மீட்பு மற்றும் மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.வரதராஜன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்தார். 
* ஐ.நா. மேற்பார்வையோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து மக்கள் விரும்புகின்ற ஒரு சுதந்திர அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடத்தி தமிழ் ஈழம் அமைய, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை மீது பன்னாட்டு நீதி மன்றத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும், தனித் தமிழீழம் அமைய பொது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 22-04-2012 அன்று கிருஷ்ணகிரியில்  மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

* குமரி வனப்பகுதியில் விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி மரங்கள் சட்டத்திற்கு புறம்பாக அழிக்கபடுவதை குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் கண்டித்தார். 

* கடலூர் மாவட்ட செயலாளர் இரா.பஞ்சமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் என்.எல்.சி.யில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

* தமிழக வாழ்வுரிமை கட்சியின், சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் காவேரி தலைமையில்நடைபெற்றது. அதில் சேலம் மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற வேண்டும்;என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 
 
* நதிநீர், புயல் நிவாரணம், ஈழத்தமிழர் படுகொலை விவகாரம், நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை உள்ளிட்டவைகளில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் குற்றம் சாட்டினார்.
* கன்னியாகுமரியில் சுனாமி எச்சரிக்கை மையத்தை திறக்க  தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் கோரிக்கை விடுத்தார். 
* கடலூர் மாவட்டம் குமராட்சியில் மே 17, 2012 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  இலங்கை முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 


Read more...

புதுச்சேரியில் பேருந்து நிறுத்தங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

சனி, 19 ஜனவரி, 2013

புதுச்சேரியில் பேருந்து  நிறுத்தங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை அமைப்பாளர்  புதுவை ஸ்ரீதர் கோரிக்கை விடுத்துள்ளார். 







Read more...

சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திருவள்ளுவர் தினவிழா கொண்டாட்டம்

புதன், 16 ஜனவரி, 2013

சேலம்:

      சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின்  மாநில விளையாட்டு அணி துணை செயலாளர் சரவணமூர்த்தி, சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து, மாநகர அமைப்பாளர் கராத்தே வெங்கடேஷ், தொழிலதிபர் நாகராஜன் உள்பட பலர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

Read more...

குறிஞ்சிப்பாடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

குறிஞ்சிப்பாடி:

          குறிஞ்சிப்பாடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க  விழா  நடந்தது. நகர செயலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி பகுதியில் மீனாட்சிப்பேட்டை, ரயிலடி, வி.எம்.பி., நகர், பஸ் நிலையம், சாவடி, கடைவீதி, அண்ணா நகர் உட்பட பல இடங்களில் மாநில நிர்வாகக் குழுத் தலைவர் திருமால்வளவன் கட்சிக் கொடி ஏற்றி வைத்தார். இதில் வரதராஜன்பேட்டை தலைவர் தனுசு, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, ஒன்றிய செயலர் ஐயப்பன், தனசேகர், ராஜவெங்கடேசன், வைத்தியநாதன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.


Read more...

சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013






சிதம்பரம்:
             தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு கம்பளி போர்வை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

         சிதம்பரம் அன்பகம் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியோர், சர்வராஜன்பேட்டை ஆதரவற்ற பள்ளி மாணவர்கள், குமராட்சி ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்று திறனாளி மாணவ, மாணவிகள் ஆகிய 60 பேர் உள்ளிட்ட சாலையோர ஆதரவற்றோர் 200 பேருக்கு கம்பளி போர்வை மற்றும் உதவிகள்  வழங்கப்பட்டது. சிதம்பரம் அன்பகம் காப்பகத்தில் நடந்த விழாவிற்கு சிதம்பரம்  நகராட்சி கவுன்சிலர் ரமேஷ் தலைமை தாங்கினார். குமராட்சி ஒன்றிய செயலர் தமிழ்வாணன் முதியோர்களுக்கு உதவிகள் வழங்கினார். சிதம்பரம் நகர செயலர் தில்லை, லால்பேட்டை பேரூராட்சி செயலர் பரமசிவம், மாவட்ட நிர்வாக குழு தமிழ்தம்பி, சுந்தரமூர்த்தி, சுகுமார், நடராஜ், ஜெயராணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

Read more...

முசிறியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா

திங்கள், 14 ஜனவரி, 2013

முசிறி:

     முசிறியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கட்சி  கொடியேற்றுதல் மற்றும்   பள்ளி மாணவ இலவச  திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடந்தது.

        விழாவுக்கு, மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் சுரேஷ்ராஜா வரவேற்றார். புறநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில துணை பொதுசெயலாளர் முத்து, விவசாய அணி செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் காமராசு, துணை செயலாளர் ரவி ஆகியோர் ஆமூர், கோட்டூர், மணப்பாளையம், பெரமூர், முசிறி, அய்யம்பாளையம், சித்தாம்பூர், ஏவூர் உட்பட, 20க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்தும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கியும் பேசினார். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, சுப்பிரமணியன், கிளைத்தலைவர்கள் கதிர்வேல், பிரபாகரன், சக்திவேல், பழனி, கண்ணதாசன், ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.





Read more...

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

சிதம்பரம்:

          கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தில்லை கோவிந்தராஜா மண்டபத்தில் 12/01/2013 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.

          மாவட்டச் செயலர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். நகரச் செயலர் கோவி.தில்லைநாயகம், சுரேஷ், கா.வெங்கடேசன், ரா.தீபக், பிரகாஷ், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், ஒன்றியச் செயலர்கள் கரிகாலன், வாசுசரவணன், ஆண்டவர் செல்வம், கஜேந்திரன், கேஆர்ஜி தமிழ், கேபிஎஸ் சங்கர், கேபிள் ராஜேஷ் உள்ளிட்டோர் பேசினர். இளம்புயல் பாசறை மாவட்டச் செயலர் ரா.கா.குமரன் நன்றி கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 1.ஜனவரி 25-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்துக்கு, திரளாக சென்று பங்கேற்பது,

2.  2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அனைத்து கிராமங்களிலும் புதிதாக கொடியேற்றி கொண்டாடுவது,

3. வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது,

4. பரங்கிப்பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் கட்சிக் கொடிமரங்களை திருடிச் சென்று கலவரத்தை தூண்டும் சமூகவிரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP