கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
சிதம்பரம்:
கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தில்லை கோவிந்தராஜா மண்டபத்தில் 12/01/2013 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.
மாவட்டச் செயலர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். நகரச் செயலர் கோவி.தில்லைநாயகம், சுரேஷ், கா.வெங்கடேசன், ரா.தீபக், பிரகாஷ், அருள் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், ஒன்றியச் செயலர்கள் கரிகாலன், வாசுசரவணன், ஆண்டவர் செல்வம், கஜேந்திரன், கேஆர்ஜி தமிழ், கேபிஎஸ் சங்கர், கேபிள் ராஜேஷ் உள்ளிட்டோர் பேசினர். இளம்புயல் பாசறை மாவட்டச் செயலர் ரா.கா.குமரன் நன்றி கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.ஜனவரி 25-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்துக்கு, திரளாக சென்று பங்கேற்பது,
2. 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அனைத்து கிராமங்களிலும் புதிதாக கொடியேற்றி கொண்டாடுவது,
3. வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது,
4. பரங்கிப்பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் கட்சிக் கொடிமரங்களை திருடிச் சென்று கலவரத்தை தூண்டும் சமூகவிரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக