சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
செவ்வாய், 15 ஜனவரி, 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு கம்பளி போர்வை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அன்பகம் முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியோர், சர்வராஜன்பேட்டை ஆதரவற்ற பள்ளி மாணவர்கள், குமராட்சி ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்று திறனாளி மாணவ, மாணவிகள் ஆகிய 60 பேர் உள்ளிட்ட சாலையோர ஆதரவற்றோர் 200 பேருக்கு கம்பளி போர்வை மற்றும் உதவிகள் வழங்கப்பட்டது. சிதம்பரம் அன்பகம் காப்பகத்தில் நடந்த விழாவிற்கு சிதம்பரம் நகராட்சி கவுன்சிலர் ரமேஷ் தலைமை தாங்கினார். குமராட்சி ஒன்றிய செயலர் தமிழ்வாணன் முதியோர்களுக்கு உதவிகள் வழங்கினார். சிதம்பரம் நகர செயலர் தில்லை, லால்பேட்டை பேரூராட்சி செயலர் பரமசிவம், மாவட்ட நிர்வாக குழு தமிழ்தம்பி, சுந்தரமூர்த்தி, சுகுமார், நடராஜ், ஜெயராணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். கட்சி கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக