Blogger இயக்குவது.

அரசு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றப்படுவதை கண்டித்து தஞ்சாவூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 18 ஜூன், 2013

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80% ஒதுக்கீடு வழங்கக்கோரியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் நேற்று (17/06/2013) அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில், 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அயனாவரம் திரு. சி.முருகேசன் தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திரு. ம.இரவிச்சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, ம.தி.மு.க. பொருளாளர் திரு. துரை.சிங்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழக அமைப்பாளர் திரு. அரங்க குணசேகரன், , மனித நேய மக்கள் கட்சி திரு. ஜெ.ஜெலந்தர், தாளாண்மை உழவர் இயக்கம் திரு. கோ.திருநாவுக்கரசு, முனைவர் இளமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


Read more...

அரசு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றப்படுவதை கண்டித்து கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்


தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80% ஒதுக்கீடு வழங்கக்கோரியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் நேற்று (17/06/2013) அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேலுமணி தலைமை வகித்தார். தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் பிரேம்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் இளம்பரிதி, தமிழ்த் தேசிய குடியரசு இயக்க மாவட்டச் செயலாளர் ஒப்புரவாளன், தமிழர் தேசிய இயக்க மாவட்டத் தலைவர் முருகேசன், மதிமுக நகரச் செயலாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளை தமிழ் வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்று மொழியாகவும் இருக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல், கழிப்பறைகள் கட்டாயம் செயல்பட வேண்டும். விளையாட்டு, இசை, ஓவியம் ஆகிய துறைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 




Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தை அடுத்த சிவபுரியில் நடந்தது.

கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்டத் தலைவர் சிவா தலைமை தாங்கினார்.   நகர செயலாளர் கோவி தில்லைநாயகம், துணைத் தலைவர் சுகுமார், நகர மாணவரணி செயலாளர் ராம்ஜி மற்றும் நிர்வாகிகள் குமரன், சுரேஷ், சீனிவாசன், விஜய், சரவணன், பாண்டியன், மாரிமுத்து, பாஸ்கர், சேகர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிவபுரி தண்ணீர் பந்தல் சந்திப்பில் கட்சிக் கொடியை மாவட்ட செயலாளர் முடிவண்ணன் ஏற்றினார்.

Read more...

அரசு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றப்படுவதை கண்டித்து பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

திங்கள், 17 ஜூன், 2013







































தமிழக அரசு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து தமிழ் வழிக் கல்வி பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை புகுத்தி உள்ளது. தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் வழிக் கல்விக்கு தமிழக அரசு இந்த ஆண்டு முதல் மூடு விழா காண்கிறது . தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வியை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 80 % இட ஒதுக்கீடு தரக் கோரியும் இன்றி தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்ட கண்டன ஆர்பாட்டம் 17/06/2013 அன்று நடந்தது. 
 
இந்த கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமை தாங்கினார். மேலும் தமிழ் வழிக் கல்வியை ஆதரித்து ,மதிமுக, தமுமுக, தந்தை பெரியார், திராவிடக் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி, தமிழ் தேச விடுதலை இயக்கம், சேவ் தமிழ் இயக்கம் , மே 17 இயக்கம், உலக தமிழ் சங்கம், தமிழர் எழுச்சி இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் பங்கேற்றன. பண்ருட்டி தி.வேல்முருகன்,தோழர் தியாகு, மல்லை சத்தியா, விடுதலை ராஜேந்திரன், திருமுருகன் காந்தி, சேவ் தமிழ் செந்தில் , குணங்குடி அனிபா, ஆனூர் செகதீசன், அருண்ஷோரி, அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். 
 
      தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியே முதன்மை பாடமாகவும் பயிற்று மொழியாகவும் இருத்தல் வேண்டும் , ஆங்கிலம் , ருசியா, சீனம் பிரெஞ்சு போன்ற மொழிகள் இரண்டாம் பாடாமாக இருக்கலாம் இதன் மூலம் உலக அளவில் உள்ள அறிவுச் செல்வங்களை தமிழ் மொழிக்கு , தமிழ் நாட்டிற்கு கொண்டு வரலாம் . தமிழில் சிந்திக்கும் ஆற்றல், படைப்புத் திறன் என்பது தமிழ் மொழி வழியில் படித்தால் மட்டுமே தமிழர்களுக்கு வரும், தமிழர்கள் சிறக்க தமிழ் வழிக் கல்வி அவசியம் என்ற கருத்தை தோழர் தியாகு அவர்கள் சிறப்பாக முன்மொழிந்தார். தமிழ்வழிக் கல்வியின் அவசியத்தை பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் முன்வைத்தனர். அடுத்த தலைமுறை சிறந்த பண்பாடுகள் கொண்ட அறிவியல் சமூகமாக மாற அனைத்து பாடங்களையும் தமிழில் தமிழ்நாட்டு குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது . அரசு உடனே தனது ஆங்கில வழிக் கல்வி திட்டத்தை கைவிட்டு தமிழ் வழிக் கல்வியை அனைத்து பள்ளிகளிலும் ஊக்குவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அண்ணாகிராமம் ஒன்றியம் (மேற்கு) பொதுக் குழுக் கூட்டம்

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் (மேற்கு) தொரப்பாடி பேரூராட்சி சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், புதுப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (16/06/2013) நடந்தது.

அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் ஆ.ராஜகோபால் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் ம.செந்தாமரை, பொருளர் பி.நாராயணன், துணை செயலர் ந.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொரப்பாடி பேரூர் நகரச் செயலர் துரை.குமார் வரவேற்றார்.

மாநில நிர்வாகக் குழுத் தலைவர் தி.திருமால்வளவன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் இரா.பஞ்சமூர்த்தி, இளைஞரணிச் செயலர் கி.சிவசண்முகம், விவசாய அணித் தலைவர் ஜி.ராஜேஷ், தொண்டரணிச் செயலர் ஜோ.மருதநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொரப்பாடி நகரத் தலைவர் மா.செ ல்வரத்தினம் நன்றி கூறினார்.

Read more...

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

ஞாயிறு, 16 ஜூன், 2013

கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தருமபுரியில் சனிக்கிழமை (15/06/2013) நடைபெற்ற  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தக் கூட்டத்துக்கு, மாநிலத் துணைப் பொதுச் செயலர் தவமணி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், மலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் திருமால்வளவன், மகளிரணிச் செயலர் ஜெயலட்சுமி, மாநில வழக்குரைஞர் அணி தலைவர் காந்திகுமார், துணைச் செயலர் சரவணன், மாவட்ட தலைவர் முன்சீப் செல்வம், மாவட்ட செயலர்கள் முனிரத்தினம், பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கட்சியின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினர்.
 
கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு சில இடங்களில் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், ஊராட்சிகள் பயன்பெறும் வகையில், போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இந்தத் திட்டத்துக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகளால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் மோசடைந்துள்ளன. எனவே, அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க வேண்டும்.

2. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்து வங்கிகளையும் கல்விக் கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. ஆனால், பல்வேறு வங்கிகள் கல்விக் கடனை வழங்காமல் மாணவர்களை அலைக்கழித்து வருகின்றன. இத்தகைய வங்கிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
3. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்த பிறகும் பல்வேறு தனியார் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு பயிற்சி என்ற பெயரால் கொள்ளை லாபம் ஈட்டி வருவதைக் கண்காணித்து தடை செய்ய வேண்டும். 

4. விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க தமிழக அரசு அனுமதி மறுத்திருப்பது பாராட்டுக்குரியது. தடங்கம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் கொட்டப்படும் தருமபுரி நகராட்சி கழிவுகளால் சுற்றுப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கழிவுகளை வேறு இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
 
5.வெண்ணாம்பட்டி, குமாரசாமிப்பேட்டை, அதியமான்கோட்டை, பாப்பாரப்பட்டி ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அறிவிப்பு வெளியாகியும் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை துரிதமாக முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.




 

Read more...

சீர்காழியில் சூன் 29 ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் கூட்டம்

திங்கள், 10 ஜூன், 2013

சீர்காழியில் சூன் 29 ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது..






Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP