அரூரில் பா.ம.க.,விலிருந்து 100 பேர் விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்
புதன், 14 மார்ச், 2012
அரூர்:
அரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் முன்னிலையில் பா.ம.க.,விலிருந்து விலகி 100 பேர் கட்சியில் இணைந்தனர்.
அரூருக்கு நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் வந்தார். அப்போது அவரது முன்னிலையில் நகர செயலாளர் முருகன் தலைமையில் 50 பேரும், கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த பா.ம.க.,வினர் 50 பேரும் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். மேலும் அரூர் டவுன் பஞ்சாயத்தில் உள்ள அழகுசெல்வி, அப்துல் சுக்கூர் ஆகிய இரண்டு வார்டு உறுப்பினர்களும் பா.ம.க.,விலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சி கட்சியில் இணைந்தனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் அளித்த பேட்டி:
பா.ம.க., துவங்கும் போது எடுக்கப்பட்ட கொள்கை, லட்சியம் ஆகியவற்றிலிருந்து ராமதாஸ் விலகி பா.ம.க.,வை குழி தோண்டி புதைத்து விட்டனர். இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த தியாகிகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால், யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பா.ம.க., ஆரம்பிக்கும் போது தனது குடும்பத்திலிருந்து யாரும் எம்.பி.,யாகவோ, எம்.எல்.ஏ.,யாகவோ வரமாட்டார்கள் என்று கூறினார். ;ஆனால், அவரது மகனை அன்புமணியை மத்திய அமைச்சராக்கினர். அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பதவிகளை வழங்கினார். வன்னியர் அறக்கட்டளையை ஆரம்பிக்கும் போது வன்னியர் மக்களிடம் இருந்து நன்கொடை வாங்கினார். ஆனால் அதற்கு தலைவராக அவரது மனைவி சரஸ்வதியை நியமித்தார். குடும்ப உறுப்பினர்களை அறக்கட்டளை உறுப்பினர்களாக நியமித்தார். பா.ம.க.,வில் குடும்ப ஆதிக்கம் தான் உள்ளது. வன்னிய மக்கள் புறக்கணிக்க படுகின்றனர். பா.ம.க.,வில் நடந்த குளறுபடிகளை நிர்வாக குழு கூட்டத்தில் பேசினேன். உடனே என்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டனர். பா.ம.க.,வுக்கு உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை துவக்கியுள்ளோம்., கட்சி துவங்கிய இரு மாதத்தில் ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். பா.ம.க.,விற்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. பா.ம.க.,வுக்கு இனி எதிர்காலம் இல்லை. பா.ம.க., ஆரம்பிக்கும் போது 9 சதவீதம் ஓட்டுவங்கி இருந்தது. தற்போது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது இவ்வாறு கூறினார்.
தமிழக வாழ்வுரிக் கட்சி தலைவர் காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணைத்தலைவர் மலர், தவமணி உட்பட பலர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக