கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோடிக் கம்பங்கள் வெட்டி சாய்ப்பு :பா.ம.க., வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல்
செவ்வாய், 13 மார்ச், 2012
கடலூர் :
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த பா.ம.க., வினர் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ் கடலூரில் சாலை மறியல் நடாவ்பெற்றது.
கடலூர், முதுநகர் அடுத்த வள்ளி காரைக்காடு கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடிக்கம்பம் நேற்று முன்தினம் வெட்டி சாய்க்கப்பட்டது. இதனை கண்டித்தும், இதற்கு காரணமான பா.ம.க., மாநில துணை பொதுச்செயலர் சண்முகம், மாவட்டச் செயலர் தாமரைக்கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியி ன் தொண்டர்கள் 25 பேர் கடலூர் பாரதி சாலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர்கள் புதுநகர் சரவணதேவேந்திரன், முதுநகர் (பொறுப்பு) குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பா.ம.க., வினர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை 3.50 மணிக்கு அனைவரும் மறியலை கைவிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக