Blogger இயக்குவது.

சேலம் போஸ் மைதானத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்கூட்டம்

செவ்வாய், 6 மார்ச், 2012

சேலம்:
 
         சேலம் போஸ் மைதானத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் 04/03/2012 ஞாயிற்றுகிழமை மாலை   நடந்தது. 
 
        கூட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் எஸ்.கே. சக்திவேலன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் ஜெயமோகன் வரவேற்றார். முத்து, மா.கணேசன், பாலு, காட்டுரவி, எஸ்.ரவி, எஸ்.கே.ஆர்.அன்பரசன், ஏ.வடிவேல் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவருமான வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான வேல்முருகன் ஆற்றிய சிறப்புரை:
 
        தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காகவும், சாதி, சமய, மத எல்லைகளுக்கு அப்பால் தமிழர்கள் அனைவரையும ஒன்று திரட்டி அவர்களின் உரிமைக்காக பாடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி. தமிழ் ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக தனி ஈழம் மலர வேண்டும் என்ற பிரபாகரனின் கனவு நிறைவேற வேண்டும் என்பதும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நோக்கமாகும். மனித நேயம் வளர்த்தல், மனித நேயம் காத்தல், மனிதனை மனிதனாக மதித்தல், மன நலம் குன்றியவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உதவுதல், ஆதரவற்றோருக்கும், முதியோர்களுக்கும், ஏழை எளியோருக்கும், ஊனமுன்றோருக்கும் வாழ்வளித்தல், விவசாய நிலங்கள் மனை நிலங்களாக விற்கப்படுவதை தடுத்தல் உள்பட 26 கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. 
 
        தமிழக மக்களின் உரிமைகளை காக்க என்றென்றும் நாங்கள் துணை நிற்போம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான கட்சியாகத்தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
 
       தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பேராசிரியர் தீரன், பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காவேரி, மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் வீரப்பனின் மாமனார் ஜி.அய்யனாரும் பேசினார்.
 
        கூட்டத்தில் நிர்வாகிகள் மேட்டூர் ராமசுப்பன், கே.வி. சிவராமன், சத்யமூர்த்தி, சி.அழகேசன், ரவிஅலெக்ஸ், சண்முகசுந்தரம், விஜய் குமார், மலர் ராமலிங்கம், எஸ்.அய்யந்துரை, வி.நடராஜன், சிவக்குமார், ஆறுமுகம், நாகமணி, தலித் சக்திவேல், எம்.விஜயலிங்கம், சங்கர் கணேஷ், பாப்பாத்தி ராமமூர்த்தி, கண்ணன், முகமது யூசுப், பாலு, காஞ்சி குமார், பிரகாஷ், கோபிநாத், தவமணி, மனோகரன், தீனா, கணேசன், அன்பு, சரவணன், ராமச்சந்திரன், செந்தில்குமார், குமரேசன், சுப்பிரமணியம், பார்த்திபன், பாலன், சுரேஷ் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.பி.குமார் நன்றி கூறினார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP