Blogger இயக்குவது.

கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல்

வெள்ளி, 30 நவம்பர், 2012

கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள பண்ருட்டி வேல்முருகன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

         கர்நாடகம் கைவிரிக்கஉச்சநீதிமன்றமும் இழுத்தடிக்க இனியும் பொறுமை ஏன்? ஓரணியில் திரள்வோம் தமிழர்களே!

        காவிரி நதிநீர் கோரி தமிழக முதல்வர் பெங்களூர் சென்று நடத்திய பேச்சுவார்த்தையை அலட்சியம் செய்து சொட்டு நீரையும்கூட தரமறுத்திருக்கிறது கர்நாடகம். உச்சநீதிமன்றமோ இன்று கூட விசாரணையை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளிலோ சம்பா பயிர் கருகிப் போய் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டி வருகிறது. காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு உரிய நியாயமான பங்கினைப் பெற்றுத்தர மத்திய அரசு தவறிவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட அதை செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அந்த கர்நாடக மாநில அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மறுப்பதுடன் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்துக்கு உத்தரவிடுவது எந்தவகையில்தான் நியாயமோ? இதுதான் இந்திய ஒருமைப்பாடா?

            இப்படித்தான் வழக்கு விசாரணை என்று நடந்து கொண்டிருக்க குறுவை சாகுபடி பொய்த்துப் போனது.. தற்போது சம்பா பயிரையும் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. தமிழக விவசாயிகளோ குடும்பம் குடும்பாக தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒரு பேரவலம் காவிரி டெல்டா பிரதேசத்தில் நடந்தேறத்தான் போகிறது. தமிழகத்துக்கு உரிமைக்காக நியாயமான வழிகளில் போராடி வரும் தமிழக அரசு, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒருமித்த ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

           இதேபோல் இனியும் கர்நாடகத்திடம் நீதி கிடைக்காது என்பதால் தமிழகத்து நெய்வேலி மின்சாரம் கர்நாடகத்துக்கு செல்வதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே தீர்வாக அமையும்! சாதி, மத, கட்சி, எல்லைகளைக் கடந்து தமிழர்களாய் ஒன்று திரண்டு கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவீரர் நினைவு தினம் அனுச்சரிக்கபட்டது

புதன், 28 நவம்பர், 2012

புதுவை, அரியாங்குப்பத்தில்  27/11/2012 அன்று ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறிய மாவீரர் தின நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிறுவனர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அதன் தலைவர் திரு.கொளத்தூர் மணி அவர்களும் கலந்து கொண்டு ஈகச்சுடரை ஏற்றி வைத்து ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியது குறித்து விளக்கும் புகைப்படங்கள். 










சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவீரர் தினம் அனுசரிப்பு

சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 27/11/2012 அன்று மாவீரர் தினம் அனுசரிப்பு



பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை பகுதிகளில் மூன்று இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கொடியேற்றினார்.

        பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட புதுச்சத்திரம், பு.முட்லூர் மேட்டுத்தைக்கால், கொட்டாப் புளிச்சாவடி ஆகிய இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா அண்மையில் நடந்தது. கணேசன் தலைமை தாங்கினார். கட்சிக் கொடியை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலர் முடிவண்ணன், ஒன்றிய செயலர் கோபு, நிர்வாகிகள் ராமச்சந்திரன், கோபி, முத்து, பத்பநாபன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதுச்சேரி உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில செயல் வீரர்கள் கூட்டம்

சனி, 24 நவம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பேராசிரியர் அய்யா தீரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.காவேரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.காமராசு மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பளார் திரு. ஸ்ரீதர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில செயல் வீரர்கள் கூட்டம் புதுவையில் நடைபெற்றது. புதுச்சேரியில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்காக ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
















திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்



       வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

   திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் நேற்று (23/11/2012) மறைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    பேரறிஞர் அண்ணா காலம் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தம்மை ஒப்படைத்துக் கொண்டு திமுகவின் முதன்மையான தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர் வீரபாண்டியார். பூலாவரி பஞ்சாயத்து தலைவர் முதல் மாநிலத்தின் அமைச்சராக வரை தம் வாழ்நாளின் பெரும்பகுதியை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வுக்காகவே ஒப்படைத்துக் கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம்.

           சேலத்தில் இரும்பாலை, மருத்துவக் கல்லூரி, ரயில்வே கோட்டம் போன்ற அமைக்க போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற அவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக, வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த காலங்களில் தமிழக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர். கட்சிப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்பு என அனைத்திலும் திறம்பட செயலாற்றிய வீரபாண்டியார் எனும் போர்ப்படை தளபதியை இழந்து தவிக்கும் திமுகவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காட்டுமன்னார்கோவிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதி உதவி

வெள்ளி, 23 நவம்பர், 2012

காட்டுமன்னார்கோவில்

       சிதம்பரம் அடுத்த மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன் மற்றும் தெம்மூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோரது வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமராட்சி ஒன்றிய செயலர் தமிழ்வாணன் நிதி உதவி வழங்கினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் கண்ணன் இல்லத் திருமண விழா

செவ்வாய், 20 நவம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் கண்ணன் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்.







சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து உண்ணா விரத போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு

வெள்ளி, 16 நவம்பர், 2012

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வை பாதிக்கும் ஊதியம் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடக் கோரி அனைத்து கட்சி சார்பில் சிதம்பரத்தில் நவம்பர் 15  அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

      கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 7ம் தேதி அதிகாரிகளுடன்துணைவேந்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.நிதி நிலையை சமாளிக்க ஆட் குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு போன்றவற்றை செயல்படுத்த இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து பல்கலைக் கழக ஊழியர்களிடையே போராட்டம் வெடித்தது. இதனால் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

         பல்கலைக் கழகம் கடுமையான நிதி சிக்கலில் இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர் களுக்கு வரும் மாதங்களில் சரிவர ஊதியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்து துறை புல முதல்வர்கள், தலைவர்கள், இயக்குனர், தொலை தூரக்கல்வி இயக்ககம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பதிவாளர் மீனாட்சிசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பினார்.இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே  நவம்பர் 15 ல் நடந்தது.

         மா.கம்யூ., எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்,  தி.மு.க., நகர செயலர் செந்தில்குமார், அவைத்தலைவர் தென்னவன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், மாவட்டச் செயலர் செல்லப்பா, நகர செயலர் கோவி தில்லைநாயகம், காங்., டாக்டர் வள்ளல்பெருமான், சரவணகுமார், தே.மு.தி.க., மாவட்டச் செயலர் சபா சசிக்குமார், நகர செயலர் விஜயகுமார், பா.ம.க., மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன், நகர செயலர் முத்துகுமார், மா.கம்யூ., நகர செயலர் ராமச்சந்திரன், இந்திய கம்யூ., மாநிலக் குழு மணிவாசகம், நகர செயலர் சேகர், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலர் செல்வராசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார், துரை சரவணன்மற்றும் சங்கங்கள், வணிக அமைப்பு நிர்வாகிகள், அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

           போராட்டத்தில் பேசிய தலைவர்கள், நிர்வாகம் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிடவேண்டும். பல்கலைக் கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும். அரசு இப்பிரச்னையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். சிண்டிகேட் கூட்ட முடிவிற்கு பின் தொடர் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். எந்தவித நடவடிக்கையும் இல்லையெனில் பல்கலைகழகத்தை அரசுடமையாக்க சட்டம் கொண்டு வர அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தி பேசினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து நவம்பர் 15 - ல் உண்ணா விரத போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்க முடிவு

ஞாயிறு, 11 நவம்பர், 2012



சிதம்பரம்:

         அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆட்குறைப்பு, ஊதியம் குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து நவம்பர்  15ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகம் நிதி நிலைமையைச் சமாளிக்க ஆள் குறைப்பு மற்றும் ஊதிய குறைப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பல்கலை நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ளது.

             இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை அண்ணாமலை நகரில் நடந்தது. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பல்கலைக் கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் மதியழகன், பொதுச்செயலர் ரவிச்சந்திரன், கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயசந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரமகுரு, தி.மு.க., அவைத்தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் வெங்கடேசன், தே.மு.தி.க,., மாவட்ட செயலர் சபாசசிகுமார், நகர செயலர் சந்தானகிருஷ்ணன், பா.ம.க., திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர் கருணா, நகர செயலர் முத்துக்குமார், மா.கம்யூ., மாநிலக்குழு மூசா, நகர செயலர் ராமச்சந்திரன், கற்பனைச்செல்வம், இந்திய கம்யூ., செயலர் சேகர், வட்ட செயலர் பூபாலன், ம.தி.மு.க., வழக்கறிஞர் மோகனசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

      1. அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ள ஆட்குறைப்பு மற்றும் ஊதியம் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடவேண்டும்.

           2. இப்பிரச்னையில் சமூக நிலை ஏற்பட தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

         3. பல்கலைக் கழக நிர்வாகத்தின் ஆள் குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள், அனைத்துக் கூட்டமைப்புகள், அனைத்து சங்கம், வணிகர்கள், பொது மக்கள் சேர்ந்து வரும் 15ம் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

சனி, 10 நவம்பர், 2012

 
 
 
 
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்  ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை -  பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரான்சு நாட்டு தமிழர் ஒருக்கிணைப்புக் குழுத் தலைவருமான ரீகன் என்ற பரிதியை சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் பாரீஸ் நகரில் சுட்டுக் கொன்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளை வெளிநாட்டில் ஏற்கெனவே சிங்களப் புலனாய்வு பிரிவினர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். தற்போது பரிதியையும் சிங்களப் பேரினவாதிகள் படுகொலை செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.



தன் வாழ்நாள் முழுவதும் தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியான பரிதிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது வீரவணக்கத்தை செலுத்துகிறது. தளபதி பரிதியின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

காவிரி நதி நீர் பகிர்வில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்திற்க்கு நெய்வேலி மின்சாரம் தர கூடாது - தமிழக வாழ்வுரிமைக் கட்சி

சனி, 3 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து இந்தியா டுடேவில் வெளியான கட்டுரை



கொட்டும் மழையில் நடந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம்

வெள்ளி, 2 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரை



நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சார டவர்களை கைப்பற்றுவோம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்

வியாழன், 1 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான கட்டுரை






 

Pages (26)123456 Next

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP