விழுப்புரம்
நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள்
உளுந்தூர்பேட்டையில் 15.04.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற்ற தேர்தல்
பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
பிரசார
கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.ஆனந்தன்,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வ.ச.சுரேஷ்குமார்,
மாவட்டசெயலாளர் உளுந்தூர்பேட்டை ஞா.ராஜேஷ், ஒன்றிய செயலாளர் திருநாவலுர்
க.கோபி, ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஷ், வீ.மோகன், திருவண்ணைநல்லுர்
ஒன்றியசெயலாளர் ராம்பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் ஞா.சந்தோஷ், பிரசன்னா,
பெஸ்ட் கசாலி திருநாவலுர் கோபால், ஏ.கோட்டை ஆனந்து, கிழக்கு மருதூர் ரகு,
ஒன்றிய நிர்வாகிகள் கிளாப்பாளையம் மணி, களமருதூர் முஸ்தபா, பள்ளியதாங்கல்
ரவி, க.நெமிலி ராஜீவ்காந்தி, காத்தவராயன், கிள்ளனுர் ஆனந்து, சின்னா
நைனாக்குப்பம் முருகன், அரளி மகேந்திரன், ஆதி அய்யனார், நகர நிர்வாகிகள்
முரளி, ஷம்மு லட்சுமணன், கா.வினோத் கமலக்கண்னன், சந்துருஉள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:
தேசியக் கட்சி மற்றும் திராவிட கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என பாமக
நிறுவனர் ராமதாஸ் கூறிவந்தார். ஆனால் தற்போது தேசிய கட்சியான பாஜக,
திராவிட கட்சிகளான மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கொள்கையில்லாமல்
கூட்டணி அமைத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக பதவி உயர்வு அளித்த
மக்களின் குறைகளை சட்டப்பேரவைக்குச் சென்று முதல்வரிடம் எடுத்துரைத்து
தேவையான உதவிகளை பெற்றுத் தர முன்வராதவர் விஜயகாந்த். அவரது பொறியியல்
கல்லூரியில் அதிகத் தொகைக்கு சீட்களை விற்பனை செய்யும் அவர், ஊழலை ஒழிக்க
பாடுபடுவதாக கூறுகிறார்.
ஈழத்தமிழர்களை ராஜபக்சே அரசு கொன்று
குவித்தபோது வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி. ஆனால், இலங்கை அரசுக்கு எதிராக
தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. கச்சத்தீவை
தாரைவார்த்தவர் கருணாநிதி. ஆனால் அதை மீட்பேன் என்று கூறியவர் ஜெயலலிதா.
தமது குழந்தைகளுக்காக குடும்ப ஆட்சி செய்தவர் கருணாநிதி. ஆனால் மக்களையே
குடும்பமாக நினைத்து ஆட்சி செய்கிறவர் ஜெயலலிதா.
Read more...