இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
புதன், 9 அக்டோபர், 2013
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில துணைப்பொதுச்செயலாளர் தமிழ்நேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துமாரியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் அக்டோபர் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
2. இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது.
3. செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டும்.
4. இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்துவது
உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக