Blogger இயக்குவது.
புதுக்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுக்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி பெயரில் மருத்துவக்கல்லூரி அமைத்து தர புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சனி, 12 ஜூலை, 2014

புதுக்கோட்டை: 

 புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (11.07.2014) நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் பாபு வரவேற்றார். மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் (தெற்கு) பழனியப்பன், பெருநகர செயலாளர் அப்புக்குட்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், துணை செயலாளர் மாரியப்பன், மகளிரணி செயலாளர் மாலாஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணதேவா துவக்க உரையாற்றினார். இதில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தி.திருமால்வளவன், தலைமை நிலைய செயலாளர் உ.கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை தமிழ்நேசன், மாநில தமிழர் படை தலைவர் ஜோதிலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

 மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

 1. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி பெயரில் மருத்துவக்கல்லூரி அமைத்து தர வேண்டும்

 2. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் 

 3. புதுக்கோட்டை நகரத்திற்கு உட்பட்ட காமராஜபுரம், மச்சுவாடி, போஸ்நகர், ஜுவாநகர், நரி மேடு, தைலாநகர், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு மினி பேருந்து வசதி செய்துதர வேண்டும். 

 4. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் முடித்து குருக்கே தடுப்பணைகளை ஏற்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

 என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
















Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

செவ்வாய், 1 ஜூலை, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் நாடி. பழனியப்பன் தலைமையில் அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தி. திருமால்வளவன், தலைமை நிலையச் செயலர் உ. கண்ணன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.பி. தமிழ்நேசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களைத் தொடர்ந்து சிறைபிடிக்கும் இலங்கை அரசை கண்டிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது. 

2. மீனவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டம்

திங்கள், 11 நவம்பர், 2013

புதுக்கோட்டை:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) ரயில் மறியல் போராட்டம்:

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் சாந்தநாதபுரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருமுருகன் வரவேற்றார். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சரவணதேவா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் மலையப்பன், சாந்தகுமார், மாலா, மாரியப்பன், கோவிந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கந்தர்வக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


1. ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்க கூடாது.

2. இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது

3. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை செவ்வாய்கிழமை (12.11.2013) கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் ஆணைக்கிணங்க ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more...

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் ஆலோசனை கூட்டம்

திங்கள், 2 செப்டம்பர், 2013

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனை கூட்டம் 01/09/2013 அன்று நடந்தது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் சரவணதேவா தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சின்னத்தம்பி வரவேற்றார். திருமுருகன், மாரியப்பன், தவசுமணி, சேகர், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் திரு. மே.ப. காமராஜ் சிறப்புரையாற்றினார். கோவிந்தன், பாலு, முருகேசன், ராமநாதன், மாரிமுத்து, மாலா, கலைச்செல்வி, துரைராஜ், சரவணன், பன்னீர்செல்வம், நாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராசு நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது.

2. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுகாதாரமற்று இருப்பதால், இதை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP