நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி 01.09.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர்
பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நேற்று
25.08.2014 கடலூரில் நடைபெற்றது. பேட்டியின் போது, ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அன்பழகன், மாவட்ட தலைவர்
பஞ்சமூர்த்தி, நிர்வாகிகள் ஆனந்து, செந்தில், கமலநாதன், அருள்பாபு ஆகியோர்
உடனிருந்தனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர்
பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அளித்த பேட்டி :
என்எல்சி நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணி
செய்து வருபவர்கள் குறைந்த ஊதியத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
10,600 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், இதுவரை
செய்யப்படவில்லை. இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க
வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னையில் தமிழக முதலமைச்சர் நேரடியாக
தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 1ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் என்எல்சி தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. பணிநிரந்தரம் செய்யப்படாமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் தொழிலாளர்கள் இதில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். 2012ம் ஆண்டுக்குள் குறைந்தது 5 ஆயிரம் பேர் பணிநிரந்தரம் செய்வதாக கூறிய நிலையில் என்எல்சி நிர்வாகம் இதுவரை ஏமாற்றி வருகிறது. தற்போது அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இதற்கு தவாக முழு ஒத்துழைப்பு தரும். உண்ணாவிரத போராட்டமும் அதற்கு முழு வலு சேர்க்கும்.
என்எல்சியின் சார்பில் சுற்றுப்புற கிராம அபி விருத்தி வளர்ச்சிக்கான திட்டநிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். என்எல்சி அனல்மின்நிலைய விரிவாக்கத்தில் ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக