காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக் கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்றது
ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014
காஸா மீதான இஸ்ரேல் இனப்படுகொலைகளைக்
கண்டித்தும் இஸ்ரேலுடனான உறவுகளை இந்திய மத்திய அரசு துண்டிக்க
வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று 09.08.2014
(சனிக்கிழமை) காலை சென்னை எழும்பூர் லாங்ஸ் கார்டன் ஆதித்தனார் சாலையில்
கட்சியின் மாநில பொருளாளர் அக்ரம்கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை:
”பாலஸ் தீனத்தில் நடந்து வரும் தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள், நோயாளிகள் என அப்பாவி பொதுமக்களை இஸ்ரேல் தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருகிறது. இச்சம்பவத்தை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைத் தவிர பிற நாடுகள் கண்டித்து வருகின்றன. ஆனால் உலகின் மிகப்பெரிய நாடான இந்திய அரசு இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பதைக் கண்டித்தும், அதே சமயம் ஐநா சபையில் இவ்விஷயத்தைக் கொண்டுச்சென்று பாலஸ்தீனத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முயற்ச்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்” என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக