Blogger இயக்குவது.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் 5 அப்பாவி தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றத் தீர்ப்பை கண்டிக்கும் விதமாக சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றும் மாபெரும் முற்றுகைப் போராட்டம்! - ஆயிரக்கணக்கோர கைது

வெள்ளி, 31 அக்டோபர், 2014

எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகிய 5 அப்பாவி தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த சிங்கள பேரினவாத அரசின் சென்னை தூதரகத்தை அகற்ற முற்றுகையிட்ட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை பண்ருட்டி வேல்முருகன் தலைமையில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர் தியாகு, திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க. ராஜேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட இயக்கத்தினர் கலந்துக்கொண்டனர். இப் போராட்டத்தில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
 


 
 




 

Read more...

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு : 5 மீனவர்கள் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு உடனே மேற்கொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 30 அக்டோபர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

2011ஆம் ஆண்டு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்து தற்போது கொழும்பு உயர்நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளதாக வெளியாகி இருக்கும் பேரதிர்ச்சியளிக்கிறது.

2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோர் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிளாடுவின் என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேரையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் நெடுந்தீவு கடற்பரப்பில் போதைப் பொருள் கடத்தினர் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கடந்த 3 ஆண்டுகாலம் அவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வந்தது.

இந்த மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று எத்தனையோ போராட்டங்கள், வேலை நிறுத்தங்களை தமிழக மீனவ உறவுகள் நடத்திப் பார்த்தும் மத்திய அரசு தலையிடவே இல்லை. இதன் விளைவாகத்தான் இன்று கொழும்பு உயர்நீதிமன்றம் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்துள்ளது கொடுமை அரங்கேறியுள்ளது.

தூக்குத் தண்டனை என்ற முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டி இப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது என்பது உலகில் எங்குமே நடந்திராக அநியாயத்தின் அக்கிரமத்தின் உச்சகட்டம். இந்த 5 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் போனதன் விளைவுதான் இன்று எங்கள் மீனவர்கள் தூக்குக் கொட்டடியில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தூக்கு மர நிழலில் இருக்கும் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் நலனுக்காக உரத்து குரல் கொடுத்து வரும் தமிழக அரசும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் தூக்கு மேடையில் நிற்கும் 5 அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

இலங்கையில் மலையகத் தமிழர்கள் வாழும்பதுளை மாவட்டத்தின் மீரியபெத்த பெருந்தோட்டத்தில் ஏற்ப்பட்ட நிலச்சரிவில் 400 தமிழர்கள் மண்ணில் புதைந்த பெருங்கொடுமை - இந்தியா இரங்கல் தெரிவிக்காதது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் அறிக்கை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பதுளை மாவட்டத்தின் மீரியபெத்த பெருந்தோட்டம் என்ற மலையகத் தமிழர்கள் வாழும் கிராமம் ஒட்டுமொத்தமாக நேற்று காலை 7 மணியளவில் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனது.

இதில் 140 குடும்பங்களைச் சேர்ந்த 400 தமிழர்கள் மண்ணில் புதைந்து போயினர் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. இதுவரை 150 தமிழர்களே மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் 300 தமிழர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து மடிந்திருக்கலாம் என்ற பேரிடியான செய்திகள் வருகின்றன. இந்திய -இலங்கை அரசுகளின் துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் இந்திய- இலங்கை மண்ணில் தமிழ்ச் சமூகம் பெருந்துயரை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நூற்றாண்டுகளாக கொத்தடிமைகளாக இலங்கையின் மலையகத்தில் அடிப்படை வசதிகளற்ற கேட்பாரற்ற நிலையில் பெருந்தோட்டங்களில் பணிபுரிந்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களை இயற்கையும் இப்போது கொடுந்துயருக்குள்ளாக்கி இருக்கிறது. இலங்கையின் மலையகப் பகுதி பெரும் நிலச்சரிவை எதிர்கொள்ள நேரிடும் என்று எத்தனையோ அமைப்புகள் எச்சரித்த போதும் சிங்களப் பேரினவாத அரசு மலையகத் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவில்லை. மலையகத் தமிழர்களின் இந்த பெருந்துயரத்துக்கு இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவைச் சேர்ந்த ஓரிருவர் வெளிநாட்டில் தாக்கப்பட்டால் துடிதுடித்தெழும் இந்திய மத்திய அரசே! குடும்பம் குடும்பமாக இலங்கையின் மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போன நிலையில் ஒரு அதிர்ச்சியையும் இரங்கலையும் கூட தெரிவிக்கவில்லை..மீட்புப் பணிகளில் ஈடுபட முனைப்பு காட்டவில்லை என்பது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது.

மலையகத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் மலையகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை ஏற்படுத்தித் தரவும் தேவையான நிவாரண நிதி உதவி வழங்கவும் இலங்கை அரசை இந்திய மத்திய அரசு உடனே வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

மழையால் பாதிக்கப்பட்ட நிவாராம் வழங்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

மழையால் பாதிக்கப்பட்ட நிவாராம் வழங்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 
 

Read more...

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறியை அடுத்த கைகாட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன், 29 அக்டோபர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொது செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் (மேற்கு) கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். புற நகர் மாவட்ட செயலாளர் (வடக்கு) ராஜா, மாநில செயலாளர் கனக மணி, மாவட்ட இளை ரணி செயலாளர் சுரேஷ் ராஜா, மாவட்ட தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்திய மத்திய அரசைக் கண்டிப்பது, கடந்த ஒருவருடமாக முதியோர் உதவித் தொகை, திருமண உதவித்தொகை வழங்காமல் அலைக்கழித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது, திருச்சி -நாமக்கல் தார்சாலை ஏவூரிலிருந்து மேய்க்கல்நாயக்கன்பட்டி வரை மிகவும் மோசமாக உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.பொது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வேண்டும். முசிறி தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Read more...

ஏழை மாணவியரின் உயர்கல்வி நிறுவன நுழைவுத் தேர்வுக்கான மத்திய அரசின் 'உதான்' (UDAAN) பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்ப காலத்தை நீடிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏழை மாணவியரின் உயர்கல்வி நிறுவன நுழைவுத் தேர்வுக்கான மத்திய அரசின் 'உதான்' பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்ப காலத்தை நீடிக்க கோரிக்கை!

நாட்டின் அரசு உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றில் ஏழை மாணவியர் அதிக எண்ணிக்கையில் சேரும் வகையில் மத்திய அரசானது "உதான்" (UDAAN) என்ற நுழைவுத் தேர்வு பயிற்சித் திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. (CBSE) நிர்வாகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூ 6 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 11,12ஆம் வகுப்பு படிக்கும் 1000 மாணவியருக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். இதில் 50% மாணவியர், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவியராக இருப்பர். இப்பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களை படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

பிளஸ் 1 படிப்பவர்களாக இருந்தால் 10-ம் வகுப்பில் குறைந்த பட்சம் 70 விழுக்காடு மதிப்பெண்ணும், கணிதம், அறிவியல் பாடங்களில் 80 விழுக்காடு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.பிளஸ் 2 மாணவிகளுக்கு 10-ம் வகுப்பில் மேற்கண்ட மதிப்பெண் தகுதியுடன் 11-ம் வகுப்பில் 75 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

இந்த நுழைவுத் தேர்வு பயிற்சியானது இணையம் வழியும் சில நேரடி பயிற்சி வகுப்புகள் மூலமும் நடத்தப்படுகின்றன. இந்த "உதான்" பயிற்சி திட்டத்தின் மூலமாக என்.ஐ.டி, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு 100% கல்வி நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கும். சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் பயிலும் மாணவிகள் மட்டுமின்றி அனைத்து மாநில கல்வி பாடத் திட்டத்தின் கீழ் பயிலுவோரும் (State board) இப்பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் இத்திட்டம் நாட்டின் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பங்களின் மாணவியருக்கு பயன்தரக்கூடிய ஒரு நல்ல திட்டம். ஆனால் இந்த திட்டம் அண்மையில்தான் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பரவலாக பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே இன்னமும் முழுமையாக சென்று சேரவில்லை.

தமிழகத்தில் இத்திட்டம் பற்றி தெரிந்து கொள்ள மதுரை மற்றும் கோவையில் மட்டுமே "ஒருங்கிணைப்பு" மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இப் பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் அக்டோபர் 27 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒடுக்கப்பட்ட மக்களை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லாம் 30க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்து இத்திட்டம் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மதுரை, கோவை என்ற 2 இடங்களில் மட்டும் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டு ஒரு சில பள்ளிகளுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தத்துக்குரியதாகும். இந்த போக்கானது சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டுமே "உதான் திட்டம்" பயன்படப் போகிறதோ என்ற அய்யத்தை எழுப்புகிறது. அதுவும் இந்தியா முழுவதும் 1,000 மாணவியர்தான் தேர்வு செய்யப்படுவர் என்பதும் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து சந்தேகங்களை வலுவாக்குகிறது.

"உதான்" பயிற்சி திட்டத்தை பிரதமர் மோடியின் "தூய்மை இந்தியா" திட்டம், எப்படியெல்லாம் அனைத்து ஊடகங்களிலும் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்படுகிறார்களோ அதைவிட கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்த வேண்டும். அத்துடன் நாடு முழுவதும் 1,000 மாணவியர் மட்டுமே தேர்வு என்ற வரம்பை பல மடங்கு அதிகப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறைகள் மூலம் சி.பி.எஸ்.சி. அல்லாத அனைத்து கல்வி முறை பள்ளிகளுக்கும் சுற்றறிக்கைகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இதனால் "உதான்" பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்ப காலத்தை மேலும் ஒரு மாதம் அல்லது 2 மாதம் நீட்டிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதேபோல் இத்திட்டம் குறித்து பெற்றோரும் மாணவர்களும் அறிவதற்கான "ஒருங்கிணைப்பு மையங்களை" மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் பெற்றோர்களையும் மாணவர்களையும் சென்றடையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன். ஏழை எளிய மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி எதிர்கால சந்ததியினரின் வளமான கல்வியை உறுதிப்படுத்திட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

மாணவர்கள் பிரபாகரன், செம்பியன், பிரதீப் ஆகியோரை கைது தொடர்பாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 25.10.2014 அன்று நடைபெற்றது

சனி, 25 அக்டோபர், 2014

மாணவர்கள் கைது தொடர்பாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அன்று 25.10.2014 நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1) கத்தி திரைப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 தோழர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 தோழர்களை காவல்துறையினர் காவல்நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்து சத்யம் திரையரங்கு தாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழர் நலனுக்காகப் போராடும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் மாணவர்களுக்கும் தொடர்பிருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனடிப்படையில் இந்த சம்பவத்துக்கு எந்தவித தொடர்புமே இல்லாத மாணவர்கள் பிரபாகரன், செம்பியன், பிரதீப் ஆகியோரை நள்ளிரவில் 2.45 மணிக்கு கைது செய்ததுடன் அவர்களது பெற்றோர், உறவினர்களையும் காவல்நிலையத்து அழைத்து வந்து மிரட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை பார்ப்பதற்கு கூட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினருக்கோ வழக்கறிஞர்களுக்கோ அனுமதி மறுக்கப்பட்டதுடன் இந்த மாணவர்கள் எந்த காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலையும் கூட சென்னை மாநகர காவல்துறை தெரிவிக்கவில்லை. இந்த மாணவர்களை அண்ணாசாலை காவல்நிலையம், நுங்கம்பாக்கம் காவல்நிலையம், அண்ணாநகர் காவல்நிலையம், திருவல்லிக்கேணி காவல்நிலையம், ராயப்பேட்டை காவல்நிலையம் என கூட்டமைப்பினரையும் வழக்கறிஞர்களையும் மாணவர்களது பெற்றோரையும் தேடி அலைகழிக்க வைத்ததுடன் உலகத்திலேயே மிகப் பெரிய குற்றவாளிகள் போல அவர்களை ரகசியமாக வைத்திருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு வராமல் நீதிபதி வீட்டுக்கு சென்று சிறையில் அடைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவைப் பெற்று வெவ்வேறு வண்டிகளில் மாற்றி மாற்றி அழைத்துச் சென்று சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும் சில மாணவர்களையும் தேடுவதாக கூறிக் கொண்டு அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை காவல்நிலையங்களுக்கு அழைத்து வந்து துன்புறுத்துகிற செயல் தொடர்கிறது.

ஒரு பொய் வழக்கில் மாணவர்களை சேர்த்து அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் மாபெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கவும் அவர்களது தமிழின உணர்வை முடக்க நினைப்பதையும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. இதேபோல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை நகரின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான குமரன் அவர்களின் மனைவியை இன்று அதிகாலை அண்ணாசாலை காவல்நிலைய அதிகாரிகள் அழைத்து வந்து அச்சுறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி மிகவும் அநாகரீகமாக நடத்தியுள்ளதையும் இக்கூட்டம் கடுமையாக கண்டிக்கிறது.

இதுபோன்ற செயல்களை செய்வதற்கு பின்னால் இருந்து உத்தரவிட்ட து ராஜபக்சேவின் கும்பலா? அல்லது சுப்பிரமணியன் சுவாமியின் கும்பலா? அல்லது தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பை குலைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளும் இனத்துரோகக் கும்பலா? என்பதை காவல்துறையின் கண்ணியமிக்க மூத்த உயர் அதிகாரிகள்- தமிழ்நாட்டில் இருக்கின்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான இன உணர்வாளர்களுக்கும் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினருக்கும் உண்மையை விளக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதையும் இந்த கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

2) தமிழர் நலனுக்காகப் போராடும் மாணவர்கள் மற்றும் இன உணர்வாளர்களை காவல்துறை தொடர்ந்து கைது செய்தால் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் ஒன்றாக கைதாவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

3) இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையாளனுமாகிய ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்திருப்பதை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழினத்துக்கு தொடர்ச்சியாக துரோகம் செய்து கொண்டுவருகிற, தமிழின அழிப்புக்கு உடந்தையாக இருந்த, இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கூட்டாளியான சுப்பிரமணியன் சுவாமியை இந்தியாவை விட்டு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய மத்திய அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

4) மேட்டூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் பாலாறு பகுதியில் மீன்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பழனி என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கும் கடும் கண்டனத்துக்கும் உரியது. கர்நாடகா வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜா, முத்துசாமி என்ற மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கர்நாடகா வனத்துறை இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தனத்தை கைவிட வேண்டும். கர்நாடகாவின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த பழனி குடும்பத்துக்கு ரூ25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவருக்கும் அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

5) ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடைக்கான காரணங்கள் நியாமற்றவை என்று கூறி தடையை நீக்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு தடைவிதித்ததன் அடிப்படையில்தான் ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடைக்கான காரணங்கள் நியாயமற்றது என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான அர்த்தமற்ற தடையை நீக்க வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இந்திய மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

6) இலங்கைத் தீவில் இனப்படுகொலை நிகழ்த்திய, தமிழ்நாட்டு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து 600க்கும் மேற்பட்ட மீனவ உறவுகளை சுட்டுப் படுகொலை செய்த சிங்கள கடற்படையின் தளபதி ஜெயந்த பரேராவுக்கு நாளை மறுநாள் (அக்டோபர் 27) இந்திய கடற்படையின் வீர விருது கொடுக்கப்பட இருக்கிறது என்று தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தியப் பேரரசின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் 600 குடிமக்களைப் படுகொலை செய்த ஒரு நாட்டின் கடற்படை தளபதிக்கு இந்தியப் பேரரசே விருது கொடுப்பது என்பது மிகவும் கொடூரமானது.. வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டு மக்களை- மீனவர்களை தனது நாட்டு குடிமக்களாக இந்தியப் பேரரசு கருதவில்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஓரணியாக நின்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையுடன் தொடர்ந்தும் பொருளாதார- ராணுவ உறவுகளை இந்தியப் பேரரசு மேற்கொள்வதும் சிங்கள ராணுவத்தினருக்கு மரியாதையும் விருதும் கொடுப்பதையும் தமிழகம் ஒருபோதும் ஏற்காது. இத்தகைய போக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு எச்சரிக்கிறது.
 

 

Read more...

தமிழகத்தில் சமன்படுத்திய ஆவின் பால் விலை ரூ.10 உயர்வு - தமிழக அரசு விலை உயர்வை பாதியளவு குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
ஆவின் பால் விலை உயர்வு- தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு அட்டைதாரர்களுக்கான சமன்படுத்திய பால் விற்பனை விலை ரூ 10 என்ற அளவுக்கு உயர்த்தி மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார். இது சாமானிய மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும்.

விலை வாசி உயர்வால் பெரும் வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் பால் உற்பத்தியாளர்கள் நலனைக் கொண்டு பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது என்பது சரியான நடவடிக்கைதான். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் எருமைப்பால் லிட்டருக்கும் 4-ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 23 ல் இருந்து ரூ 28 ஆகவும் எருமைப்பால் கொள்முதல் விலை ரூ31 ல் இருந்து ரூ35 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் இந்த கொள்முதல் விலை உயர்வின் அடிப்படையில் சமன்படுத்திய பால் விற்பனை விலை ரூ 24 ல் இருந்து 34 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எளிய மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். 3 ஆண்டுகளுக்குப் பின்னரான விற்பனை விலை உயர்வாக இருந்தாலும் ரூ10 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பது ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும்.

இத்தகைய விலை உயர்வை எளிய அடித்தட்டு மக்களால் சமாளிக்க முடியாது. இதனால் இந்த ஆவின் பால் விற்பனை ரூ10 என்கிற அதிகப்படியான விலையை தமிழக அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்.

ஏழை எளிய மக்கள் நலன் காக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசானது இந்த கோரிக்கையை தாயுள்ளத்துடன் பரிசீலித்து விலை உயர்வை பாதியவாவது குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

தி. வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி


Read more...

கத்தி திரைப்படத்திலும், விளம்பரத்திலும் லைக்கா புரொடக்ட்ஷன் பெயரை நீக்க கருணாமூர்த்தி உறுதி மொழி கடிதம் - தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் கத்தி திரைப்படத்தை வெளியிட அனுமதி

செவ்வாய், 21 அக்டோபர், 2014

சென்னையில் இன்று மாலை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (21.10.2014) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கத்தி திரைப்படத்திலும் விளம்பரத்திலும் லைக்கா புரடொக்ஷன்ஸ் பெயரை நீக்க உறுதியளித்து அந்நிறுவனத்தின் கருணாமூர்த்தி உறுதி அளித்த கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் லைக்காவின் உறுதி மொழி கடிதம், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்களிடம் கொடுக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் செய்தியாளர்களுக்கு   பேட்டி :

 லைக்கா நிறுவனம் தமது பெயரை படத்திலும் விளம்பரங்களிலும் பெயரை நீக்க உறுதி அளித்துள்ளது. கத்தி திரைப்படம் நாளை வெளியாகி அதன் முதல் காட்சியில் லைக்கா நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளதா என கண்காணிப்போம். எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டபடி லைக்கா பெயர் நீக்கப்பட்டிருந்தால் எங்களது போராட்டத்தை நிறுத்துவோம். அனைத்து திரைப்பட சங்கங்களும் எதிர்காலத்தில் லைக்கா நிறுவனத்துடன் எந்த ஒரு வர்த்தக உறவை வைத்துக் கொள்ளமாட்டோம் என்றும் எங்களுக்கு உறுதி அளித்துள்ளன. லைக்கா நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைக்கமாட்டோம் என அனைத்து திரைப்பட சங்கங்களும் உறுதியளித்துள்ளன என்றார் வேல்முருகன்.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பிடம் இன்று மாலை (அக்.21, 2014) லைக்கா நிறுவனம் செய்தியாளர்கள் முன்னிலையில் அளித்த உறுதி மொழி கடிதம்:


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவரகள் தலைமையில் நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தை 18.10.2014 அன்று ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் கொட்டும் மழையில் என்.எல்.சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 18.10.2014 அன்று நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தினர் நேரு சிலை அருகே திரண்டனர். இப்போராட்டத்தில் தொழிலாளர் வாழ்வுரிமை சங்க சிறப்பு தலைவர் அன்பழகன், ஆலோசகர் தேவராஜன், மாநில துணை பொது செயலாளர் கண்ணன், நகர செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர் ஞானப்பிரகாசம், என்எல்சி தொழிலாளர் வாழ்வுரிமை சங்க செயலாளர் வடிவுசிகாமணி, அமைப்பாளர் ராமசாமி, தொழிலாளர் வாழ்வுரிமை ஒப்பந்த சங்க நிர்வாகி அய்யப்பன், திருநாவுக்கரசு, முருகவேல், விஜயன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் இளங்கோவன் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர். 
 






























Read more...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதைப்போல் இந்திய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 16 அக்டோபர், 2014

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதைப்போல் இந்திய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்  வெளியிட்டுள்ள அறிக்கை:

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நீதிமன்றம் இன்று நீக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க போற்றுதலுக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த விடுதலைப் போரை ஒடுக்குவதற்காக இந்தியா- இலங்கை கூட்டுச் சதியால் இந்த தடை விதிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியமே இந்தியா விதித்த தடையின் அடிப்படையில்தான் புலிகள் மீதான தடையும் விதித்தது.

இதனாலேயே தமிழீழ விடுதலைப் போர் பெரும் பின்னடைவுக்குள்ளானது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் நிராயுதபாணிகளாக 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த களத்தில் இனப்படுகொலைக்குள்ளாக நேரிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளுமைக் காலத்தில் எந்த ஒரு வெளிநாட்டிலும் எந்த ஒரு தாக்குதலையும் மேற்கொள்ளாத நிலையில் உலக நாடுகள் தடை மேல் தடை விதித்து தமிழர்களை தனிமைப்படுத்தியது. இந்த தடைகளை உடைக்கும் விதமாக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு தொடர்ந்தது

இவ்வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதிதான் விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான அனைத்து தடை கட்டுப்பாட்டுகளையும் நீக்கி உத்தரவிட்டது.

இதன் மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டுவிட்டது என்ற செய்தி உலகத் தமிழினத்தை பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தர உழைத்த அனைத்து புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்துள்ள தடையை நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Read more...

என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தை 18.10.2014 அன்று முற்றுகையிட்டு போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் அறிக்கை

செவ்வாய், 14 அக்டோபர், 2014

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனையை 2 தினங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் 18.10.2014 அன்று நெய்வேலியில் என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. தி.வேல்முருகன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.





Read more...

சென்னை சாந்தோமில் உள்ள தமிழின துரோகி சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் முற்றுகை

சென்னை சாந்தோமில் உள்ள தமிழின துரோகி சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற 300க்கும் மேற்பட்ட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் நேற்று 13.10.2014 கைது செய்யப்பட்டனர்.





Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP