Blogger இயக்குவது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதைப்போல் இந்திய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 16 அக்டோபர், 2014

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதைப்போல் இந்திய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்  வெளியிட்டுள்ள அறிக்கை:

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நீதிமன்றம் இன்று நீக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க போற்றுதலுக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த விடுதலைப் போரை ஒடுக்குவதற்காக இந்தியா- இலங்கை கூட்டுச் சதியால் இந்த தடை விதிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியமே இந்தியா விதித்த தடையின் அடிப்படையில்தான் புலிகள் மீதான தடையும் விதித்தது.

இதனாலேயே தமிழீழ விடுதலைப் போர் பெரும் பின்னடைவுக்குள்ளானது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் நிராயுதபாணிகளாக 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த களத்தில் இனப்படுகொலைக்குள்ளாக நேரிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளுமைக் காலத்தில் எந்த ஒரு வெளிநாட்டிலும் எந்த ஒரு தாக்குதலையும் மேற்கொள்ளாத நிலையில் உலக நாடுகள் தடை மேல் தடை விதித்து தமிழர்களை தனிமைப்படுத்தியது. இந்த தடைகளை உடைக்கும் விதமாக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நீதிமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு தொடர்ந்தது

இவ்வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதிதான் விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான அனைத்து தடை கட்டுப்பாட்டுகளையும் நீக்கி உத்தரவிட்டது.

இதன் மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டுவிட்டது என்ற செய்தி உலகத் தமிழினத்தை பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தர உழைத்த அனைத்து புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்துள்ள தடையை நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP