தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவரகள் தலைமையில் நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தை 18.10.2014 அன்று ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம்
ஞாயிறு, 19 அக்டோபர், 2014
என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் கொட்டும் மழையில் என்.எல்.சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 18.10.2014 அன்று நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளர்
வாழ்வுரிமை சங்கத்தினர் நேரு சிலை அருகே திரண்டனர். இப்போராட்டத்தில்
தொழிலாளர் வாழ்வுரிமை சங்க சிறப்பு தலைவர் அன்பழகன், ஆலோசகர் தேவராஜன்,
மாநில துணை பொது செயலாளர் கண்ணன், நகர செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர்
ஞானப்பிரகாசம், என்எல்சி தொழிலாளர் வாழ்வுரிமை சங்க செயலாளர் வடிவுசிகாமணி,
அமைப்பாளர் ராமசாமி, தொழிலாளர் வாழ்வுரிமை ஒப்பந்த சங்க நிர்வாகி
அய்யப்பன், திருநாவுக்கரசு, முருகவேல், விஜயன், மாவட்ட இளைஞர் அணி இணை
செயலாளர் இளங்கோவன் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக