இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொள்ளிடம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
வெள்ளி, 3 ஜனவரி, 2014
இலங்கைக்
கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 227 பேரை உடனடியாக
விடுவிக்க வலியுறுத்தியும், மீனவர்களை சிறைபிடித்த இலங்கை அரசை
கண்டித்தும், துரித நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று 03.01.2014 (வெள்ளிக்கிழமை) நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்
கொள்ளிடத்திலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
நடைபெற்றது. கொள்ளிடம் புலீஸ்வரியம்மன் கோவிலில் இருந்து தமிழக
வாழ்வுரிமைக் கட்சியினர் பேரணியாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு கே. சரவணன் தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் சிவா, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் எழிலரசன், மாவட்ட தலைவர் சுதாகர், மாவட்ட துணை செயலாளர்கள் வினோத், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் சின்னதுரை, சீர்காழி ஒன்றிய செயலாளர் செங்கோவன், சீர்காழி நகர செயலாளர் கணேசன், வைத்தீஸ்வரன்கோவில் நகர செயலாளர் சிவக்குமார், சீர்காழி நகர தலைவர் செந்தில், சீர்காழி மோட்டார் சங்க தலைவர் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை கொள்ளிடம் காவல்துறையினர் கைது செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக