தமிழின விரோத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் - 300 பேர் கைது
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைக் கண்டித்தும், 65 தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் வைத்துள்ள இலங்கை அரசைக் கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் தமிழின விரோத மத்திய அரசைக் கண்டித்தும், இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும் நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் அவர்களின் தலைமையில் 17.08.2013 (சனிக்கிழமை) மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன், சிவா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக