மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொறையாறு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
புதன், 22 ஜனவரி, 2014
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாய
நிலங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை முழுமையாக
கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், இத்திட்டத்திற்காக பெரிய
நிறுவனங்களுக்கு துணைப் போகும் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொறையாறு பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் 22.01.2014 அன்று நடைபெற்றது.
முற்றுகை போராட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் பி.வினோத், மாவட்டஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, மகளிர் அணி மாவட்ட செயலர் ஆர். சாந்தி உள்பட சுமார் 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக