Blogger இயக்குவது.

Thamizhaga Vazhvurimai Katchi was against establishing atomic power plants in the entire country -

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

         T.Velmurugan, former MLA, and founder of the new political outfit Thamizhaga Vazhvurimai Katchi, has said that his party was against establishing atomic power plants in the entire country. Power shortage could be managed if the pending thermal, hydel and non-conventional energy projects are completed, he said. “We can do without Kudankulam power plant. The government has to complete pending projects at Neyveli Lignite Corporation (NLC), Tuticorin,” Mr. Velmurugan said.





Read more...

நெய்வேலி நகரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

சனி, 11 பிப்ரவரி, 2012

நெய்வேலி:'

        தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நெய்வேலி நகரில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் கொள்கைகள் குறித்தும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கட்சி சார்பில் நெய்வேலி நகரில் கட்சிக் கொடியேற்றும் விழா நெய்வேலி நகரப் பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜன் முன்னிலையில் வடிவுசிகாமணி, கலைச்செழியன், ராயர் ஞானப்பிரகாசம், இளங்கோவன் உள்ளிட்டோர் நெய்வேலி நகரின் 30 வட்டங்களிலும் கட்சிக் கொடியேற்றினர்.







Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் - காணொளி

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012





சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் பன்னாட்டு தோல் தயாரிப்பு நிறுவனங்களின் கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்தும், இலங்கை அரசின் கொடியை சென்னை வர்த்தக மையத்தில் ஏற்றி வைத்து இருக்கும் இந்திய மத்திய அரசின் போக்கை கண்டித்தும் "தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இளம்புயல் பாசறை நிறுவனருமான முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாரதஜோதி இளம் புயல் திரு.வேல்முருகன் ஆணைக்கு இணங்க  தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்தி உள்ளோம்.  12 கோடிதமிழர்களின் உணர்வை மதிக்காத இந்திய அரசை கண்டிக்கின்றோம்.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதிய உறுப்பினராக இணைய, உறுப்பினர் அட்டை பெற

புதன், 8 பிப்ரவரி, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர் அட்டை பெற:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் புதிய உறுப்பினராக இணையவும், உறுப்பினர் அட்டை பெறவும் அந்தந்த ஊரில் உள்ள கிளைக் கழகத்தில்  தொடர்பு கொண்டு உறுப்பினராக  இணைவதற்கான படிவத்தை நிரப்பி கொடுத்து உறுப்பினர் அட்டையை பெறலாம். மேலும் சென்னை போரூரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உறுப்பினராக  இணைவதற்கான படிவம் கிடைக்கும்.



 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலக முகவரி:





கட்சி தலைமையகம்,
எண்.145, எம்.எஸ்.ஆர். வளாகம் ,
குன்றத்தூர் சாலை,
போரூர், சென்னை  - 600116.


Read more...

கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012


        கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டமன்றத்  தொகுதிகளுக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா, நேற்று  சேத்தியாத்தோப்பில்  நடந்தது. தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விழாவில் கலந்துகொண்டு பேசினார். 

 தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது

         ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழக  வாழ்வுரிமைக் கட்சி  துவக்கப்பட்டுள்ளது. 


Read more...

ஏ.ஆண்டிக்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா

பண்ருட்டி:

        தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 32-வது வார்டு ஏ.ஆண்டிக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பஞ்சமூர்த்தி கொடியேற்றினார். கட்சிப் பொறுப்பாளர்கள் இரா.கோதண்டபாணி, இராமகிருஷ்ணன், இரா.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கி.பழனிவேல் நன்றி கூறினார்.




Read more...

சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகம் திறப்பு விழா

திங்கள், 6 பிப்ரவரி, 2012

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/63e28401-510c-4f12-a775-1069431df908_S_secvpf.gif

சேலம்:

        சேலம் 5ரோடு அருகே தமிழக வாழ்வுரிமைக்  கட்சி அலுவலகம் 5/02/2012 காலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில துணை பொது செயலாளர் சக்திவேலன் தலைமை வகித்தார்.
தமிழக வாழ்வுரிமைக்  கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான காமராஜ் வரவேற்றார். இதில் பொது செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான வை.காவேரி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் விபரம் :

         சேலத்தில் மார்ச்  மாதம் 4-ம்தேதி பொதுக்கூட்டம் நடத்துவது. இதில்
தமிழக வாழ்வுரிமைக்  கட்சி நிறுவனர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகளை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும். 

         தர்மபுரியில் நடந்த கூட்டத்தில அப்பாவி தொண்டர்களை அனுப்பி ரகளை செய்ய தூண்டிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். 
    
    தர்மபுரி பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் 

        என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேறியது. 

பின்னர் முன்னாள் சட்ட்டமன்ற உறுப்பினர் திரு. காவேரி கூறியது:-

      தமிழக வாழ்வுரிமைக்  கட்சி ஜாதி சமயமற்ற தமிழ், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து உண்மையாக மக்களுக்கு உழைக்கும். முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சினைகளிலும் ஈடுபட்டு இந்த பிரச்சினை தீர பாடுபட உள்ளோம். நல்ல திட்டங்கள் அரசிடம் கேட்டு பெற்று மக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய உள்ளோம். தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேண்டும்என்றே சிலர் புகுந்து கலாட்டா செய்துள்ளனர்.

      எங்களது கட்சியின் வளர்ச்சியை கண்டு அதை தாங்கி கொள்ள முடியாத பா.ம.க.வினர் கலாட்டா செய்துள்ளனர். இவர்களை கைதுசெய்து அமைதி ஏற்படுத்த வேண்டும் என போலீசாரை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை பொது செயலாளர் ஜெய்மோகன், சேலம் மாநகர அமைப்பாளர்கள் மெகாபைட் ஆனந்தன், குமார், தெற்கு மாவட்ட செயலாளர் முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் அழகேசன், வடிவேல், சத்யராஜ், பகுதி செயலாளர் வெங்கடேசன், மேற்கு மாவட்ட அமைப்பாளர் கணேசன், வைரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.









Read more...

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

    கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி தி.வேல்முருகன்அறிவித்துள்ளார்.


இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான ண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட அறிவிப்பு

         எதிர்கால தலைமுறையினரையும் இந்த மண்ணையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் அணு உலைகளை எதிர்த்து காந்திய வழியில் போராடிவரும் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது நேற்று அணு உலைக்கு ஆதரவனோர் என்ற பெயரில் இந்து மக்கள் கட்சி மற்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கைக்ககூலிகளாலும், கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அமைதியான முறையில் அரசின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள சென்றவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினரின் முன்னால் தாக்கியது காட்டுமிராண்டித்தனமானது.

           இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வெறிச்செயலில் ஈடுபட்ட பாசிச இந்து முன்னணியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டோரை கண்டித்து (3-2-2012) ந் தேதி காலை10 மணியளவில், பனகல் மாளிகை எதிரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி , நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

         இதில் மனித நேய ஆர்வலர்களும்,தமிழின உணர்வாளர்களும், இளைஞர்கள், பொதுமக்களும், பெருந்திரளாய் கலந்து  கொள்ள வேண்டுகிறோம்

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக திரு. சக்திவேலன் நியமனம்

புதன், 1 பிப்ரவரி, 2012

சேலம்: 
        தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக, சேலத்தை சேர்ந்த சக்திவேலன் நியமிக்கப்பட்டுள்ளார். 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான   பண்ருட்டி தி. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை:
 
தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக, சேலம் சக்திவேலன் நியமிக்கப்படுகிறார். 

சேலம் தெற்கு மாவட்ட அமைப்பாளராக முத்து, மாநகர அமைப்பாளராக மெகாபைவ் ஆனந்தன் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர்.
 
 
         தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சக்திவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான   பண்ருட்டி தி.வேல்முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  பேராசிரியர் தீரன், மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், இணைச் செயலாளர் சண்முகம், மற்றும் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Read more...

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்: முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் பாராட்டு

பண்ருட்டி:

     தானே புயலில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் ரூ.1,000 கோடியில் கட்டப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறினார்.

 பண்ருட்டியில் திங்கள்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் கூறியது:

           புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என அறிவித்த முதல்வரை பாராட்டி வரவேற்கிறேன். விவசாயிகளுக்கு முந்திரி, பலா கன்றுகளை தந்து, ஒரு ஆண்டுக்கு பராமரிப்பு செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன்.  

          புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் விவசாய, கூட்டுறவு, தேசிய வங்கிக் கடன்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்து, அவர்களது வயிற்றில் பால் வார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். 

கல்விக் கட்டணம்: 

           5 ஆயிரம் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கடலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர்கள் இயக்கம் சார்பில் முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் நியாயமான இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் கட்டணத்தை கட்டியாக வேண்டும் என நிர்பந்திப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

          புயல் நிவாரணம் அளிப்பதற்காக, நெய்வேலியில் உள்ள குளுனி பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் ரூ.500 முதல் ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்து வருகிறது. இயலாத மாணவர்களை வகுப்பறையில் சேர்க்க மறுக்கின்றனர். இக்கல்வி நிறுவனத்தின் மீது அரசும், கல்வித் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வசூலித்த பணத்தை திரும்பத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.வேல்முருகன் கூறினார்

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP