Blogger இயக்குவது.

சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகம் திறப்பு விழா

திங்கள், 6 பிப்ரவரி, 2012

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/63e28401-510c-4f12-a775-1069431df908_S_secvpf.gif

சேலம்:

        சேலம் 5ரோடு அருகே தமிழக வாழ்வுரிமைக்  கட்சி அலுவலகம் 5/02/2012 காலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில துணை பொது செயலாளர் சக்திவேலன் தலைமை வகித்தார்.
தமிழக வாழ்வுரிமைக்  கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான காமராஜ் வரவேற்றார். இதில் பொது செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான வை.காவேரி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் விபரம் :

         சேலத்தில் மார்ச்  மாதம் 4-ம்தேதி பொதுக்கூட்டம் நடத்துவது. இதில்
தமிழக வாழ்வுரிமைக்  கட்சி நிறுவனர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகளை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும். 

         தர்மபுரியில் நடந்த கூட்டத்தில அப்பாவி தொண்டர்களை அனுப்பி ரகளை செய்ய தூண்டிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். 
    
    தர்மபுரி பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் 

        என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேறியது. 

பின்னர் முன்னாள் சட்ட்டமன்ற உறுப்பினர் திரு. காவேரி கூறியது:-

      தமிழக வாழ்வுரிமைக்  கட்சி ஜாதி சமயமற்ற தமிழ், மொழி, இனம் ஆகியவற்றை கடந்து உண்மையாக மக்களுக்கு உழைக்கும். முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சினைகளிலும் ஈடுபட்டு இந்த பிரச்சினை தீர பாடுபட உள்ளோம். நல்ல திட்டங்கள் அரசிடம் கேட்டு பெற்று மக்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய உள்ளோம். தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேண்டும்என்றே சிலர் புகுந்து கலாட்டா செய்துள்ளனர்.

      எங்களது கட்சியின் வளர்ச்சியை கண்டு அதை தாங்கி கொள்ள முடியாத பா.ம.க.வினர் கலாட்டா செய்துள்ளனர். இவர்களை கைதுசெய்து அமைதி ஏற்படுத்த வேண்டும் என போலீசாரை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை பொது செயலாளர் ஜெய்மோகன், சேலம் மாநகர அமைப்பாளர்கள் மெகாபைட் ஆனந்தன், குமார், தெற்கு மாவட்ட செயலாளர் முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் அழகேசன், வடிவேல், சத்யராஜ், பகுதி செயலாளர் வெங்கடேசன், மேற்கு மாவட்ட அமைப்பாளர் கணேசன், வைரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP