Blogger இயக்குவது.

ஓராண்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்து வந்த பாதை பகுதி-1

சனி, 12 ஜனவரி, 2013


ஓராண்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்து வந்த பாதை பகுதி-1 :

* முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், இளம்புயல் பாசறை நிறுவனருமான பண்ருட்டி தி.வேல்முருகன் தை முதல் நாள் 15.01.2012 ( ஞாயிற்றுக்கிழமை ) சென்னை, போரூரில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய கட்சியை துவங்கினார்.

* தனது புதிய கட்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பெயர் சூட்டி, மஞ்சள், பச்சை, சிகப்பு நிறத்துடன் கூடிய கட்சி கொடியினை அறிமுகப்படுத்தினார்.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடக்க விழாவில...் கட்சியின் நிர்வாகிகளாக நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், கட்சித் தலைவர் பேராசியர் தீரன், பொதுச் செயலாளர் - திரு. காவேரி,  இணைப் பொதுச் செயலாளர் - திரு. எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலாளர் - திரு. மே.ப. காமராஜ்,  தலைமை நிலைய செயலாளர் - திரு. சண்முகசுந்தரம், மாநில மகளிரணி பாசறை செயலாளர் விஜயலட்சுமி பொறுப்பேற்றனர்.

*கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் கொடியேற்று விழா செம்மண்டலம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், சூரப்பநாயக்கன்சாவடி உள்ளிட்ட 13 இடங்களில் நடைபெற்றது. கடலூர் நகரச் செயலர் த.ஆனந்த் கொடி ஏற்றி வைத்தார்.

*தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தானே புயல் நிவாரணம் 10 ஆயிரம் கோடி வழங்கக்கோரி மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி 25-01-2012 சென்னையில் நடைபெற்றது.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக திரு. சக்திவேலன் நியமனம் செய்யப்பட்டார்.

*கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து 03-02-2012 அன்று காலை 10 மணியளவில், பனகல் மாளிகை எதிரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி , நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

*மாநில துணை பொது செயலாளர் சக்திவேலன் தலைமையில் சேலம் 5ரோடு அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகம் 5/02/2012 அன்று காலை திறக்கப்பட்டது.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 32-வது வார்டு ஏ.ஆண்டிக்குப்பத்தில் ( கடலூர் மாவட்டம்) 05/02/2012 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பஞ்சமூர்த்தி கொடியேற்றினார்.

*கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா சேத்தியாத்தோப்பில் 06/02/2012 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகள் குறித்தும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி நகரப் பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நெய்வேலி நகரின் 30 வட்டங்களில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி 08/02/2012 அன்று நடைபெற்றது.

*நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்கு தமிழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமரி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் வலியுறுத்தினார்.

*தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேலம் மாநகர் ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் சாலையில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஏ.பி.குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (19/02/2012) நடைபெற்றது.

* பா.ம.க. தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார்.

*தானே புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை 28/02/2012 அன்று உண்ணாவிரதம் நடந்தது.

*தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் 04-03-2012 மாலை, சேலம் போஸ் திடலில் நடந்த ஈழத்தின் குரல் மேதகு அண்டன் பாலசிங்கம் பிறந்த நாள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

* அரூரில் பா.ம.க.,விலிருந்து 100 பேர் விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.

*நெய்வேலி மந்தாரகுப்பம் பேருந்து நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை நாட்டைவிட்டு வெளியேற்றக் கோரியும், இராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது . அப்போது இலங்கை அதிபர் இராஜபச்சே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை கண்டித்து முழக்கம் செய்தனர்.

* 17/03/2012 அன்று கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கடலூர் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

* கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்தில் மாநிலத் தலைவர் பேராசிரியர் தீரன் அள்ளூர், பரிபூரணநத்தம், வடபாக்கம் வெய்யலூர், ஒடாக்கநல்லூர், தென்பாதி, பரதூர்சாவடி, ஆயிப்பேட்டை, சாக்காங்குடி, கீரப்பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்றினார்.

 

Read more...

தமிழர்களின் வாழ்வில் விழாக்கள் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் பொங்கல் தின சிறப்புரை

வெள்ளி, 11 ஜனவரி, 2013

கோவையில் கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் 5ஆம் ஆண்டு தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி திரு. தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு " தமிழர் வாழ்வில் விழாக்கள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.அந்நிகழ்ச்சியின் அழைப்பிதழ்.


நாள்: 11-01-2013









Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி உதயமும் இளைஞசர்களின் எதிர்காலமும்

புதன், 9 ஜனவரி, 2013



         தன் இளமைக் காலம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அர்ப்பணித்து, கடலூர் மாவட்டம் முழுவதுமல்லாமல், தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை பட்டி, தொட்டி வரை வாழும் மக்களிடம் இயக்கத்தை எடுத்து சென்று கட்சியின் ஆணி வேராக இருந்தவர். சார்பில்இரண்டு முறை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினாராக வலம் வந்து இந்தியாவின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் "பாரத ஜோதி" என்ற சிறப்பு பெற்றார். 


பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நீக்கம்

    வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடுவேண்டி நடைபெற்ற போராட்டத்தில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேலை வாய்ப்பும், அவர்களின் குடும்பங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். எந்தவித நியாமான காரணம் என்ற கோரிக்கை வைத்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அக்டோபர் 31 இரவு அன்று நீக்கபட்டார். இதனைத் தொடந்து கடலூர் மாவட்டம் முழுவதும் பதட்டம் எற்ப்பட்டது. ஆதரவாளார்களுடன்

ஆலோசனைக் கூட்டம்


         பா.ம.கவை சேர்ந்த பல மாநில, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூண்டோடு பாமகவில் இருந்து வெளியேறி பாமக தலைமைக்கு  தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் அடுத்து என்ன செய்வது என கடலூர் டவுன் ஹாலில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். பின்னர் சிதம்பரம் மற்றும் சேலத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பின்னர் தமிழகம் முழவதும்   சுற்றுப் பயணம் மேற்கொண்டு பா,ம.கவின் முன்னாள் நிர்வாகிகளைச் சந்தித்தார்அதனைத்தொடர்ந்து பாமகவில் இருந்து நீக்கபட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் பு.தா.இளங்கோவன்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான வை.காவேரி, பு.தா.அருள்மொழி, நெடுஞ்செழியன், சண்முகம், காமராஜ் பலரும் வேல்முருகனுக்கு ஆதரவு கரம் நீட்டினர். இந்நிலையில் சமூக வலைத்தளமான முகநூலில் இருந்த பல்லாயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களிடமும், பொது மக்களிடமும் தான் அடுத்து என்ன முடிவு எடுக்கலாம் என ஆலோசனைக் கேட்டிருந்தார்.

 

தானே புயல் நிவாரண உதவிகள் 

          கடலூர் மாவட்டத்தை உலுக்கிய தானே புயலில் பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், மீட்புப் பணிகளுக்கு துணை ராணுவத்தை அனுப்பக்கோரியும், உண்ணாவிரதம் இருந்தார். கடலூர் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தனது சொந்த செலவில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கடலூர்  பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்
 
       இந்நிலையில்  கடலூர்  பா.ம.க.  அலுவலகம் யாருக்கு சொந்தம்  என்பதில் பண்ருட்டி தி.வேல்முருகனின் முயற்சியால்  தொடங்கப்பட்ட அலுவலகம் தங்களுக்குதான் சொந்தம் என்றும் தி.வேல்முருகன் ஆதரவாளர்களும்,   பா.ம.க.  அலுவலகம் பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் சொந்தம் என்று பா.ம.க. துணை பொதுச் செயலாளர் சண்முகம் தரப்பினரும் தற்போது செயல்படும் கட்சி  அலுவலகம் வன்னியர் சங்கத்துக்காக வாங்கப்பட்ட இடம் என்று சீனிவாச படையாட்சியின் மகன் அமராவதி தரப்பினரும் உரிமை  கொண்டாடி கடலூர் மாவாட்ட  ஆட்சியரிடம் மனு கொடுத்து இருந்தனர். இதனைத்  தொடர்ந்து  கடலூர்  பா.ம.க.  அலுவலகம் சீலிடபப்ட்டது.

 தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடக்கம்

      ஒட்டு மொத்த தமிழக இளைஞசர்களின் ஆதரவோடு புதிய கட்சி தொடங்க முடிவெடுத்தார். முதலில் மாவீரர் தினமான நவம்பர் 27, 2012 அன்று புதிய கட்சி தொடங்கும் என எதிர்ப்பார்க்கபட்டது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் புதியக்  கட்சி தை முதல் நாள் 15.01.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொடங்கும் என அறிவித்தார். சென்னை போரூரில் கட்சித் தலைமை  அலுவலகத்தில் நடந்த எளிய விழாவில் தனது புதியக் கட்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பெயர் சூட்டி,    மஞ்சள், பச்சை, சிவப்பு, நிறத்துடன் அமைந்த கட்சி கொடியினை அறிமுகப்படுத்தினார்.   

   

Read more...

2013 வளரும் தலைவர்கள் என்ற கருத்துக் கணிப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தேர்வு

செவ்வாய், 8 ஜனவரி, 2013

இந்தியா டுடே வார இதழால் 2013 வளரும் தலைவர்கள் என்ற கருத்துக் கணிப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...




Read more...

பா.ம.க.வின் ஆணிவேரையே அசைத்த பண்ருட்டி தி.வேல்முருகன்

திங்கள், 7 ஜனவரி, 2013

              தர்மபுரியில் தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, தமிழகத்தின் வடமாவட்டங்களில் நடத்தப்படும் சாதி வெறியாட்டங்களை காணும்போது, நாகரிகமுள்ள ஒரு சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற ஐயம் ஏற்படுகின்றது. கல்லூரிக்கு சென்ற இடத்தில் காதல் வயப்பட்டு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடியைக் காரணம் காட்டி, ஒரு சமூகத்தையே குறிவைத்துக் குதறும் கொடூரம் அரங்கேறி வருகின்றது.

          ஈராக்கைக் கைப்பற்ற ஒரு பேரழிவு ஆயுதம் போல், ஆப்கானைச் சூறையாட ஒரு இரட்டை கோபுரத் தாக்குதல் போல், பாபர் மசூதியை இடிக்க ஒரு ராமர் கோயில் போல், குஜராத் கலவரத்தை நடத்த ஒரு கோத்ரா ரயில் எரிப்பு போல், கோவை முஸ்லிம்களின் உயிரைப் பறிக்கவும், உடமைகளை அழிக்கவும் ஒரு போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலை போல், தலித் மக்களை வேட்டையாடுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணம்தான், காதல் நாடகத் திருமணம்.

            எளிய மக்களை வேட்டையாடும் முன் வலிமையானவர்கள் செய்யும் முதல் வேலை, அவர்களின் மீது தப்பபிப்ராயத்தை உருவாக்குவதே ஆகும். எளியோர் மீதான வெறுப்புணர்வை பொதுப்புத்தியில் ஆழ விதைத்த பிறகே, தன் திட்டத்தை செயல்படுத்துகிறது ஆதிக்க வர்க்கம். தாக்கப்படும் மக்கள் மீது மற்ற எவருக்கும் பரிவு வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதிலேயே பாசிசத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. 'முஸ்லிம்கள் எங்கு பார்த்தாலும் குண்டு வைக்கிறார்கள்; அதனால் மோடி செய்தது சரிதான்' என்று வெகுமக்களைச் சொல்ல வைத்ததுபோல், 'தலித்துகள் எங்கு பார்த்தாலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்; அதனால் ராமதாஸ் செய்வது சரிதான்' என்று சொல்ல வைக்கிறது பாசிசம். பாசிசத்திற்கு எப்போதுமே ஒரு எதிரி வேண்டும். அமெரிக்காவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதம் போல்; இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம் போல்; இந்துத்துவத்திற்கு முஸ்லிம்கள் போல்தான்; ஆதிக்க சாதியினருக்கு தலித்துகள். எளிய மக்களை எதிரிகளாகக் காட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும், இந்துத்துவமும் என்ன செய்ததோ; என்னென்ன அடைந்ததோ, அதையெல்லாம் செய்யவும், அவற்றையெல்லாம் அடையவுமே இங்கே 'பாட்டாளி மக்கள் கட்சி' இத்தனையையும் அரங்கேற்றி வருகின்றது.

அப்படி என்னதான் பிரச்சனை பா.ம.க.வுக்கு? அல்லது ராமதாசுக்குத்தான் என்ன ஆயிற்று?

      இந்த ஒற்றை கேள்வியின் விடையில்தான், இன்றைய பிரச்சனைகளின் மொத்த சாரமும் அடங்கியிருக்கிறது. பா.ம.க.வுக்கு இப்போது என்ன பிரச்சனை என்று தெரிய வேண்டுமெனில்,

 முதலில் பா.ம.க.வைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

              விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவரி கிராமத்தில் சஞ்சீவிராயக் கவுண்டர் - நவநீத அம்மாள் தம்பதியருக்கு, 1939 ஜூலை 25 இல் மகனாகப் பிறந்தார் ராமதாஸ். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற அவர், 1967 இல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கினார். பணி நிமித்தமாக கிராமங்கள் தோறும் பயணித்த அவர், தன் சமூக மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொண்டார். பின்னர் அம்மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்கும் ஒருவராக உருமாறினார்.

     1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னியர் சங்கத் தலைவர்களையும் தன் இல்லத்தில் ஒன்று கூட்டி, ஒரே சங்கமாக கட்டமைத்து, அக்கினி குண்ட அடையாளத்துடன் மஞ்சள் நிறத்தில் கொடியை வடிவமைத்து, வன்னியர்களை ஒருமுகப்படுத்தினார். 1980 முதல் 1985 வரை வன்னியர் வாழும் பகுதிகள் எங்கும் பயணித்து தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு சங்கத்தை வலுப்படுத்தினார். வன்னியர்களுக்கு கல்வி - வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு பொதுக்கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார். பின்னர் அக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்.

          சென்னை கோட்டை நோக்கி பட்டை நாமம் அடித்து போராட்டம்; சாலை மறியல் போராட்டம்; முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம்; ரயில் மறியல் போராட்டம் என 1986 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை போராட்டம் தீவிரம் பெற்றது. பின்னர் கும்மிடிப்பூண்டியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதைத் தொடர்ந்து, ராமதாஸ் தலைமையில் ஏழுநாட்கள் தொடர் சாலை மறியல் நடத்தப்பட்டது. மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. வடமாவட்டங்கள் தனித்தீவுகளாயின. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டதன் விளைவாக 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

         நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த வன்னியர்களுக்கு வேலை கேட்டு 1988 இல், நிலம் மீட்பு போராட்டத்தை நடத்தியது வன்னியர் சங்கம். அப்போராட்டத்தின் விளைவாக வன்னியர்கள் 432 பேருக்கு வேலை கிடைத்தது. வன்னியர் சங்கத்திற்கு கிடைத்த இந்த வெற்றி, அம்மக்களை ராமதாசின் பக்கம் திருப்பியது. அவர் பின்னால் சென்றால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை வன்னியர்களிடம் விதைத்தது.

            வன்னியர் சங்கத்தின், இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை எதிர்த்து 1989 இல் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ். 'ஓட்டுப் பொறுக்கிகளே! உள்ளே நுழையாதீர்கள்' என்ற முழக்கத்துடன் காட்சியளித்தன வன்னியர் பகுதிகள். பல கிராமங்களில், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் சாய்க்கப்பட்டன. இதனால் அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அடக்குமுறைச் சட்டங்கள், கைதுகள், சிறைகள் என ஒவ்வொன்றாய் வரிசைகட்டி நின்றன.

         'இனி சங்கமாய் இருந்தால் சரிப்பட்டு வராது' என்பதை உணர்ந்த ராமதாஸ், புதிய அரசியல் கட்சியே தீர்வு என முடிவு செய்தார். 1989 ஜூலை 16 அன்று சென்னை மெரினா சீரணி அரங்கில் 'பாட்டாளி மக்கள் கட்சி' தொடங்கப்பட்டது. அந்த நாள் முதல் அக்கட்சிக்கு ஏறுமுகம் தான். 1989 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. பிற்படுத்தப்பட்ட 107 சாதிகளுடன் வன்னியர் சமூகத்தையும் இணைத்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனி இடஒதுக்கீடு கிடைக்காவிட்டாலும் இந்த உள்ஒதுக்கீடே ராமதாசின் முயற்சியினால் விளைந்ததுதான் என்ற எண்ணம் வன்னியர்களிடம் ஆழ வேரூன்றியது. அது தேர்தலிலும் எதிரொலித்தது.

       1991 சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜீவ் காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையில் அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்ற வேளையில், தன்னந்தனியாக தேர்தலைச் சந்தித்த பா.ம.க., பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்று முத்திரை பதித்தது. பா.ம.க.வின் முதல் சட்டப்பேரவை உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரனை பட்டத்து யானையில் அமரவைத்து பேரவைக்கு அனுப்பினார் ராமதாஸ். 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிமடம், தாராமங்கலம், எடப்பாடி, பெண்ணாகரம் ஆகிய நான்கு தொகுதிகளையும், புதுவையில் ஒரு தொகுதியையும் கைப்பற்றி அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது பா.ம.க.

          1998 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து நான்கு இடங்களில் வென்று முதல்முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்ததோடு, மத்திய அமைச்சரவையிலும் பா.ம.க இடம் பெற்றது.

   1999 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டு ஐந்து இடங்களில் வென்று, மத்திய அமைச்சரவையில் இரண்டு இடங்களைப் பெற்றது பா.ம.க.

      2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 20 இடங்களைக் கைப்பற்றி, தமிழக அரசியலில் தனிப்பெரும் கட்சியாக அடையாளப்பட்டது பா.ம.க.

        2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று, சிதம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திண்டிவனம், தருமபுரி ஆகிய தொகுதிகளில் வென்றதோடு புதுவை நாடாளுமன்றத் தொகுதியையும் பா.ம.க கைப்பற்றியது. ராமதாஸ் மகன் அன்புமணி நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ரயில்வேதுறை இணையமைச்சர் பதவியும் பா.ம.க.வுக்கு வழங்கப்பட்டது.

          2006 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு தமிழகத்தில் 18 இடங்களையும், புதுவையில் இரண்டு இடங்களையும் வென்றது பா.ம.க. கலைஞர் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்ததன் மூலம், ஆட்சியையே தீர்மானிக்கும் சக்தியாக பா.ம.க கவனம் பெற்றது.

          2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, 7 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க, அனைத்திலும் மண்ணைக் கவ்வியது. 2011 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 31 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இப்போது மீண்டும் கேள்விக்கு வருவோம். அப்படி என்னதான் பிரச்சனை பா.ம.க.வுக்கு?

இதுதான் பிரச்சனை;  இந்த தோல்விகள்தான் பிரச்சனை. தேர்தல் தோல்விகள் மட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் கட்சியும் ஆட்டம் கண்டு வருவது ராமதாசை நிலைகுலையச் செய்துள்ளது.

          வடமாவட்டங்களில் தனிப்பெரும் செல்வாக்குடன் அரசியல் நடத்திவந்த ராமதாசுக்கு முதல் தலைவலி விஜயகாந்தால் வந்தது. பா.ம.க.வுக்கு பெரிய அளவில் நிதி ஆதாரமாக விளங்கிய தெலுங்கு பேசும் வன்னியர்கள், மொழி அடிப்படையில் தே.மு.தி.க.வில் அடைக்கலமாயினர். அந்த எரிச்சலால்தான் செல்லுமிடமெல்லாம் விஜயகாந்தை காய்ச்சி எடுத்தார் ராமதாஸ்.


அடுத்த தலைவலி வேல்முருகனால் வந்தது. அவர் தொடங்கிய 'தமிழக வாழ்வுரிமை கட்சி', பா.ம.க.வைப் பெரிய அளவில் பாதித்தது. வேல்முருகனைப் போல ஏற்கெனவே முன்னணி தலைவர்கள் பலர் பா.ம.க.விலிருந்து விலகியுள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரன் விலகினார்; தலித் எழில்மலை விலகினார்; தீரன் விலகினார்; குணங்குடி ஹனீபா விலகினார்; பு.தா.இளங்கோவன் விலகினார். இப்படி எத்தனையோ பேர் விலகிச் சென்றபோதும் அமைப்பு ரீதியாக அது பா.ம.க.வை பாதிக்கவில்லை. ஆனால், வேல்முருகனோ ஆணிவேரையே அசைத்து விட்டார். கடலூரில் அவர் கூட்டிக் காட்டிய மாநாடு அவரது வலிமையை வெளிப்படுத்தியது. வேல்முருகன் பெயரைக் கேட்டாலே ரத்தக் கொதிப்பு வரும் அளவுக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டார் ராமதாஸ். தேர்தல் பின்னடைவு ஒருபுறம், விஜயகாந்த்; வேல்முருகன் கவலை மறுபுறம் என நிம்மதி இழந்து நிற்கும் ராமதாசுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது 2014 நாடாளுமன்றத் தேர்தல். எப்பாடுபட்டேனும், என்ன விலை கொடுத்தேனும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். குறைந்தது இரண்டு தொகுதிகளாவது வென்றால்தான் மாம்பழம் சின்னத்தையும், கட்சியின் அங்கீகாரத்தையும் தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டு அவருக்கு. 1989 இல் கட்சி தொடங்கிய நாள் முதல் 2009 வரை சுமார் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தொய்வின்றி வெற்றியை மட்டுமே சுவைத்து வந்த ராமதாசுக்கு, இது வாழ்வா சாவா பிரச்சனை.

         தனியாகத் தேர்தலை சந்தித்தால் என்ன நடக்கும் என்பது ராமதாசுக்கு நன்றாகவே தெரியும். 2009 தேர்தலிலும் 2011 தேர்தலிலும் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவை கணக்கில் கொண்டு, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தம்மிடமிருந்து விலகி நிற்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. மீண்டும் கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்ற நிலையில், தம்மோடு அணிசேர யாருமே முயற்சிக்காதது அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. என்ன செய்தால் அவர்கள் நம்மை மதிப்பார்கள்; பழையபடி பேரத்திற்கு அழைப்பார்கள் என்று இரவு பகலாக சிந்தித்து ஒருவழியாக அவர் கண்டுபிடித்ததுதான் காதல் நாடகம்; கடத்தல் திருமணம்.

      'இந்துக்களுக்கு ஆபத்து' என்று பிரச்சனையை எழுப்பி, எளிய மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிகாரத்தை வென்றது பா.ஜ.க. அதே வழியில் இப்போது 'பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு' எனும் பிரச்சனையைக் கிளப்பி, ஒவ்வொரு பெற்றோரின் உணர்வுகளையும் தூண்டி அறுவடை எடுக்கத் துடிக்கிறது பா.ம.க. தர்மபுரி தாக்குதல்களுக்குப் பின் ராமதாஸ் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் கவனிக்கத்தக்கவை. 'தலித் இளைஞர்கள் வன்னிய பெண்களை இழுத்துக் கொண்டு ஓடிப்போகிறார்கள்' என முதலில் கொளுத்திப் போட்டார்; அவரைத் தவிர மற்ற எந்த வன்னியர் அமைப்பும் அதைக் கண்டுகொள்ளவில்லை. உடனே 'தலித் - தலித் அல்லாதவர்' என்று ரூட்டை மாற்றினார்; லட்டர் பேடு சாதி சங்கங்களை தவிர பெரிய அளவில் வேறு எவரும் வரவில்லை.

           'முஸ்லிம்களே தலித்களால் உங்களுக்கு ஏற்படாத பாதிப்பா?' என்று போகிற போக்கில் சொல்லிப் பார்த்தார்; எந்த முஸ்லிம் இயக்கமும் அதை காதில் வாங்கவில்லை. தலித் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்தியவர், பின்னர் 'ஒழுக்கமான தலித் தலைவர்களோடு மட்டும் உறவாடுவேன்' என்று புதிய அறிவிப்பு செய்தார். அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அல்ல; வன்முறைக் கும்பல்' என்று விஷயத்திற்கே வந்து விட்டார்.

         ராமதாசுக்கு இப்போது பெரிய நெருக்கடியே திருமாவளவன்தான். தேர்தல் தோல்வியால்; விஜயகாந்தால்; வேல்முருகனால் எல்லாம் ஏற்பட்ட நெருக்கடியை விட இது பெரிய நெருக்கடி. தலித்துகளை எதிரிகளாகக் காட்டி சாதி இந்துக்களை தூண்டிவிடுவது என்று அவர் போட்ட கணக்கு பலித்தது. ஆனால், அதற்கு தலித்துகள் எதிர்வினையாற்றுவார்கள்; அதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல்வரை நெருப்பை அணையாமல் பாதுகாக்கலாம் என்ற அவரது எதிர்பார்ப்பு பொய்த்தது; அதைப் பொய்யாக்கியவர் திருமாவளவன். சேரியைக் கொளுத்தினால், பதிலுக்கு தலித்துகள் வன்னியர் குடியிருப்புகளைத் தாக்குவார்கள் என்று எதிர்பார்த்தார். தலித் இளைஞர்களைக் கொன்றால், பதிலுக்கு வன்னியர்கள் தரப்பில் சில தலைகள் உருளும் என்று எதிர்பார்த்தார். தலித் இளைஞர்களால் பாதிக்கப்பட்ட வன்னிய பெண்களின் பட்டியலை வாசித்தால், பதிலுக்கு சாதி இந்துக்களால் கைவிடப்பட்ட தலித் பெண்களின் பட்டியலை வாசிப்பார்கள் என்று எதிர்பார்த்தார். தலித் அல்லாதவர்களை ஒன்று திரட்டினால், தலித் அமைப்புகள் எல்லாம் சாதி அடிப்படையில் ஒன்று திரண்டு எதிர்க்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இதில் எதற்குமே திருமாவளவன் இடம் கொடுக்கவில்லை.

         தர்மபுரி தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் எங்குமே நடைபெறவில்லை. காஞ்சிபுரம் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி அம்பேத்வளவன் படுகொலைக்கு பழிக்குப் பழியாக எவரும் கொல்லப்படவில்லை. சாதி இந்துக்களால் சூறையாடப்பட்டு கண்ணீருடன் வாழ்விழந்து நிற்கும் தலித் பெண்களின் பட்டியலைச் சொல்லி உணர்ச்சிகளைத் தூண்டவில்லை. தலித் அமைப்புகளை எல்லாம் ஒன்று திரட்டி 'தலித் பாதுகாப்பு பேரவை' ஏற்படுத்தவில்லை.
'தலித் அல்லாத ஜனநாயக சக்திகள், பெரியாரிஸ்டுகள், இடதுசாரிகள், இஸ்லாமிய அமைப்புகள் ஆகியோரிடம் இந்தப் பிரச்சனையை விட்டு விடுகிறேன்; அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று நாகரிகமாக திருமாவளவன் ஒதுங்கிக் கொண்டார். அதேசமயம் பாதிக்கப்பட்ட தலித்துகளின் நியாயத்திற்காக தீவிர போராட்டங்களை முன்னெடுத்தார்.

         'அவர் அந்தப் பக்கம் வலை விரித்து விட்டு, இந்தப் பக்கம் கல்லெறிகிறார்; வலையில் போய் மாட்டிக் கொள்ள நான் என்ன முட்டாளா?' என்று அறிவுப்பூரவமாக கேட்டார் திருமாவளவன். ஒருபோதும் எதிரியின் திட்டத்திற்கு இரையாகிவிடக் கூடாது என்று சொல்லி, தன் சமூக மக்களை அவர் நெறிப்படுத்தினார். அதன் விளைவாகவே இத்தனை வன்முறைகளுக்குப் பின்னாலும் தமிழகம் பற்றி எரியாமல் இருக்கிறது. வன்முறையாளர்கள், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு, பொது நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகம், இன்று ஒரு தலைவனால் பெரும் மரியாதையைப் பெற்றுள்ளது. தலித்துகளின் சகிப்புத்தன்மையையும், அமைதியையும், ஆயுதமின்றி அறிவால் அவர்கள் கொடுத்துவரும் பதிலடியையும் எல்லோருமே இன்று வியந்து பார்க்கிறார்கள். தன் கனவுகளும், திட்டங்களும் அவற்றை அடைவதற்காக, தான் போட்டு வைத்திருந்த சதிகளும் காலாவதியாகி வருவதைக் கண்டு 'இனி என்னதான் செய்வது' என்று கைபிசைந்து நிற்கிறார், ராமதாஸ்.


[சமநிலைச் சமுதாயம், ஜனவரி 2013 இதழில் வெளியான கட்டுரை]


நன்றி : கீற்று இணையதளம்

Read more...

புதுவையில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மறியல் போராட்டம்

சனி, 5 ஜனவரி, 2013

புதுவையில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யபட்டதை கண்டித்தும்,  குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் திரு. ஸ்ரீதர் தலைமையில் புதுவை ராசா திரை அரங்கம் முன் மறியல் போராட்டம் 04/01/2013 அன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தின் பொது தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த நூற்று கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  






Read more...

கம்மாபுரம் ஒன்றியத்திலுள்ள ஏரி, குளங்கள், நீர்வழி வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி முதல்வருக்கு மனு

வியாழன், 3 ஜனவரி, 2013

விருத்தாசலம்:

   கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திலுள்ள ஏரி, குளங்கள், நீர்வழி வாய்க்கால்களை தூர்வார வேண்டும்  என தமிழக வாழ்வுரிமைக்  கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து  கம்மாபுரம் ஒன்றிய செயலாளர்  தியாகராஜன், முதல்வருக்கு அனுப்பியுள்ள  மனு விபரம் :

        1. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றிய விவசாயிகளை பாதுகாக்க மும்முனை மின்சாரம் கூடுதல் நேரம் வழங்க வேண்டும்.

         2. கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் வழங்க வேண்டும்.

        3. கம்மாபுரம் ஒன்றியத்திலுள்ள  ஏரி, குளங்கள் மற்றும் நீர்வழி வாய்க்கால்களை தூர்வாரி பாசன வசதியை மேம்படுத்த வேண்டும்.

         4. விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு கிடைக்கும்  மானியங்களில் இடைத்தரகர்கள் தலையீட்டை தடுக்க வேண்டும்.

         5. வி.குமாரமங்கலம் அருகே கட்டப்படும் அணைக்கட்டு பணிக்காக மணிமுக்தாற்றிலிருந்து மணலை  எடுத்து, நிலத்தடி நீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவோர், விலையில்லா நலத்திட்ட உதவிகளை வழங்க பணம் பெறும் ஊராட்சி தலைவர்கள், உடந்தையாக உள்ள அதிகாரிகள், நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு செய்யும் ஊராட்சி
தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

        6. மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த, கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்.

Read more...

முசிறி ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா மற்றும் மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா

புதன், 2 ஜனவரி, 2013

தா.பேட்டை:

       முசிறி ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி கொடியேற்று விழா மற்றும் மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

      திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் முத்து, மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகரத்தினம் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் சரோஜா வரவேற்றார். கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காமராசு, மாநில துணை அமைப்பு செயலாளர் ரவி ஆகியோர், முசிறி, அய்யம்பாளையம், ஏவூர், பெரமூர், சித்தாம்பூர், மணப்பாளையம் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கினர். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் முசிறி ராஜா, தொட்டியம் சுப்ரமணியன், கிளை தலைவர்கள் ஏவூர் கதிர்வேல், பெரமூர் விஜயகுமார், முசிறி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகனை 2012 - ம் ஆண்டின் செய்தி நாயகர் என இந்தியா டுடே (India Today) தேர்ந்தெடுப்பு

முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவு:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை இந்தியா டுடே வார இதழ் 2012ம் ஆண்டின் செய்தி நாயகர் என தேர்ந்தெடுத்துள்ளது அது குறித்து இந்த வார இந்தியா டுடே இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி








Read more...

பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையைத் தூண்டும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்சிகள் செயலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

கடலூர்:

       பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் மதுதான் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறினார்.

      சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையைத் தூண்டி அதன் மூலம் தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் செயலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் பாசறை சார்பில் கடலூர்  ஆட்சியர்  அலுவலகம் எதிரில் 31/12/2012 அன்று  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மகளிரணி செயலர் அமராவதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் பேபி, மாலதி, ஐஸ்வர்யா, பத்மா, சந்திரா, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவி சுந்தராம்பாள் வரவேற்றார்.

கண்டன ஆர்பாட்டத்தில் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

       டில்லியில் பாலியல் வன்முறை செய்யப்பட்டு மாணவி இறந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவி சோனியா ஆகியோரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டது. தமிழகத்தில் விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி என பல பகுதிகளிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் காமக்கொடூரர்களால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும். ஆசிரியர்களால் மாணவிகள் கற்பழிக்கப்படுகின்றனர். காதல் இல்லாத சினிமா இல்லை. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கற்பழிப்புக்கு அடிப்படைக் காரணம் மது. மதுவை ஒழிக்க பெண்கள் போராட வேண்டும். பெண் பிள்ளைகளை, தனியாக டிவி பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது .இவ்வாறு வேல்முருகன் பேசினார்.








Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP