தமிழக வாழ்வுரிமைக் கட்சி உதயமும் இளைஞசர்களின் எதிர்காலமும்
புதன், 9 ஜனவரி, 2013
தன் இளமைக் காலம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அர்ப்பணித்து, கடலூர் மாவட்டம் முழுவதுமல்லாமல், தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை பட்டி, தொட்டி வரை வாழும் மக்களிடம் இயக்கத்தை எடுத்து சென்று கட்சியின் ஆணி வேராக இருந்தவர். சார்பில்இரண்டு முறை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினாராக வலம் வந்து இந்தியாவின் சிறந்த சட்டமன்ற உறுப்பினர் "பாரத ஜோதி" என்ற சிறப்பு பெற்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நீக்கம்
வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடுவேண்டி நடைபெற்ற போராட்டத்தில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேலை வாய்ப்பும், அவர்களின் குடும்பங்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். எந்தவித நியாமான காரணம் என்ற கோரிக்கை வைத்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அக்டோபர் 31 இரவு அன்று நீக்கபட்டார். இதனைத் தொடந்து கடலூர் மாவட்டம் முழுவதும் பதட்டம் எற்ப்பட்டது. ஆதரவாளார்களுடன்
ஆலோசனைக் கூட்டம்
பா.ம.கவை சேர்ந்த பல மாநில, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூண்டோடு பாமகவில் இருந்து வெளியேறி பாமக தலைமைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் அடுத்து என்ன செய்வது என கடலூர் டவுன் ஹாலில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். பின்னர் சிதம்பரம் மற்றும் சேலத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பின்னர் தமிழகம் முழவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பா,ம.கவின் முன்னாள் நிர்வாகிகளைச் சந்தித்தார்அதனைத்தொடர்ந்து பாமகவில் இருந்து நீக்கபட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் பு.தா.இளங்கோவன்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான வை.காவேரி, பு.தா.அருள்மொழி, நெடுஞ்செழியன், சண்முகம், காமராஜ் பலரும் வேல்முருகனுக்கு ஆதரவு கரம் நீட்டினர். இந்நிலையில் சமூக வலைத்தளமான முகநூலில் இருந்த பல்லாயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களிடமும், பொது மக்களிடமும் தான் அடுத்து என்ன முடிவு எடுக்கலாம் என ஆலோசனைக் கேட்டிருந்தார்.
தானே புயல் நிவாரண உதவிகள்
கடலூர் மாவட்டத்தை உலுக்கிய தானே புயலில் பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், மீட்புப் பணிகளுக்கு துணை ராணுவத்தை அனுப்பக்கோரியும், உண்ணாவிரதம் இருந்தார். கடலூர் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தனது சொந்த செலவில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்
கடலூர் மாவட்டத்தை உலுக்கிய தானே புயலில் பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், மீட்புப் பணிகளுக்கு துணை ராணுவத்தை அனுப்பக்கோரியும், உண்ணாவிரதம் இருந்தார். கடலூர் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தனது சொந்த செலவில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்
இந்நிலையில் கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பதில் பண்ருட்டி தி.வேல்முருகனின் முயற்சியால் தொடங்கப்பட்ட அலுவலகம் தங்களுக்குதான் சொந்தம் என்றும் தி.வேல்முருகன் ஆதரவாளர்களும், பா.ம.க. அலுவலகம் பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் சொந்தம் என்று பா.ம.க. துணை பொதுச் செயலாளர் சண்முகம் தரப்பினரும் தற்போது செயல்படும் கட்சி அலுவலகம் வன்னியர் சங்கத்துக்காக வாங்கப்பட்ட இடம் என்று சீனிவாச படையாட்சியின் மகன் அமராவதி தரப்பினரும் உரிமை கொண்டாடி கடலூர் மாவாட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் பா.ம.க. அலுவலகம் சீலிடபப்ட்டது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடக்கம்
ஒட்டு மொத்த தமிழக இளைஞசர்களின் ஆதரவோடு புதிய கட்சி தொடங்க முடிவெடுத்தார். முதலில் மாவீரர் தினமான நவம்பர் 27, 2012 அன்று புதிய கட்சி தொடங்கும் என எதிர்ப்பார்க்கபட்டது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் புதியக் கட்சி தை முதல் நாள் 15.01.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொடங்கும் என அறிவித்தார். சென்னை போரூரில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த எளிய விழாவில் தனது புதியக் கட்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பெயர் சூட்டி, மஞ்சள், பச்சை, சிவப்பு, நிறத்துடன் அமைந்த கட்சி கொடியினை அறிமுகப்படுத்தினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக