கம்மாபுரம் ஒன்றியத்திலுள்ள ஏரி, குளங்கள், நீர்வழி வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி முதல்வருக்கு மனு
வியாழன், 3 ஜனவரி, 2013
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திலுள்ள ஏரி, குளங்கள், நீர்வழி வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் தியாகராஜன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விபரம் :
1. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றிய விவசாயிகளை பாதுகாக்க மும்முனை மின்சாரம் கூடுதல் நேரம் வழங்க வேண்டும்.
2. கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் வழங்க வேண்டும்.
3. கம்மாபுரம் ஒன்றியத்திலுள்ள ஏரி, குளங்கள் மற்றும் நீர்வழி வாய்க்கால்களை தூர்வாரி பாசன வசதியை மேம்படுத்த வேண்டும்.
4. விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு கிடைக்கும் மானியங்களில் இடைத்தரகர்கள் தலையீட்டை தடுக்க வேண்டும்.
5. வி.குமாரமங்கலம் அருகே கட்டப்படும் அணைக்கட்டு பணிக்காக மணிமுக்தாற்றிலிருந்து மணலை எடுத்து, நிலத்தடி நீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவோர், விலையில்லா நலத்திட்ட உதவிகளை வழங்க பணம் பெறும் ஊராட்சி தலைவர்கள், உடந்தையாக உள்ள அதிகாரிகள், நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு செய்யும் ஊராட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த, கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்.
1 கருத்துகள்:
https://www.facebook.com/Tamizhaga.Vazhvurimai.Katchi
கருத்துரையிடுக