Blogger இயக்குவது.

ஓராண்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்து வந்த பாதை பகுதி-1

சனி, 12 ஜனவரி, 2013


ஓராண்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்து வந்த பாதை பகுதி-1 :

* முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், இளம்புயல் பாசறை நிறுவனருமான பண்ருட்டி தி.வேல்முருகன் தை முதல் நாள் 15.01.2012 ( ஞாயிற்றுக்கிழமை ) சென்னை, போரூரில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய கட்சியை துவங்கினார்.

* தனது புதிய கட்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பெயர் சூட்டி, மஞ்சள், பச்சை, சிகப்பு நிறத்துடன் கூடிய கட்சி கொடியினை அறிமுகப்படுத்தினார்.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடக்க விழாவில...் கட்சியின் நிர்வாகிகளாக நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், கட்சித் தலைவர் பேராசியர் தீரன், பொதுச் செயலாளர் - திரு. காவேரி,  இணைப் பொதுச் செயலாளர் - திரு. எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலாளர் - திரு. மே.ப. காமராஜ்,  தலைமை நிலைய செயலாளர் - திரு. சண்முகசுந்தரம், மாநில மகளிரணி பாசறை செயலாளர் விஜயலட்சுமி பொறுப்பேற்றனர்.

*கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் கொடியேற்று விழா செம்மண்டலம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், சூரப்பநாயக்கன்சாவடி உள்ளிட்ட 13 இடங்களில் நடைபெற்றது. கடலூர் நகரச் செயலர் த.ஆனந்த் கொடி ஏற்றி வைத்தார்.

*தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தானே புயல் நிவாரணம் 10 ஆயிரம் கோடி வழங்கக்கோரி மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி 25-01-2012 சென்னையில் நடைபெற்றது.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளராக திரு. சக்திவேலன் நியமனம் செய்யப்பட்டார்.

*கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து 03-02-2012 அன்று காலை 10 மணியளவில், பனகல் மாளிகை எதிரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி , நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

*மாநில துணை பொது செயலாளர் சக்திவேலன் தலைமையில் சேலம் 5ரோடு அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகம் 5/02/2012 அன்று காலை திறக்கப்பட்டது.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 32-வது வார்டு ஏ.ஆண்டிக்குப்பத்தில் ( கடலூர் மாவட்டம்) 05/02/2012 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.பஞ்சமூர்த்தி கொடியேற்றினார்.

*கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா சேத்தியாத்தோப்பில் 06/02/2012 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த கண்காட்சியில் இலங்கை அரசு கலந்துகொண்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

* தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகள் குறித்தும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி நகரப் பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நெய்வேலி நகரின் 30 வட்டங்களில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி 08/02/2012 அன்று நடைபெற்றது.

*நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்கு தமிழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமரி மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் வலியுறுத்தினார்.

*தமிழக வாழ்வுரிமைக் கட்சி சேலம் மாநகர் ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் சாலையில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் சேலம் மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஏ.பி.குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (19/02/2012) நடைபெற்றது.

* பா.ம.க. தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார்.

*தானே புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை 28/02/2012 அன்று உண்ணாவிரதம் நடந்தது.

*தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் 04-03-2012 மாலை, சேலம் போஸ் திடலில் நடந்த ஈழத்தின் குரல் மேதகு அண்டன் பாலசிங்கம் பிறந்த நாள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

* அரூரில் பா.ம.க.,விலிருந்து 100 பேர் விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.

*நெய்வேலி மந்தாரகுப்பம் பேருந்து நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை நாட்டைவிட்டு வெளியேற்றக் கோரியும், இராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது . அப்போது இலங்கை அதிபர் இராஜபச்சே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை கண்டித்து முழக்கம் செய்தனர்.

* 17/03/2012 அன்று கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கடலூர் முதுநகர் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், முதுநகர் வர்த்தக சங்கத்தினர், மனித் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

* கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்தில் மாநிலத் தலைவர் பேராசிரியர் தீரன் அள்ளூர், பரிபூரணநத்தம், வடபாக்கம் வெய்யலூர், ஒடாக்கநல்லூர், தென்பாதி, பரதூர்சாவடி, ஆயிப்பேட்டை, சாக்காங்குடி, கீரப்பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்றினார்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP