பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையைத் தூண்டும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்சிகள் செயலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்
புதன், 2 ஜனவரி, 2013
கடலூர்:
பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் மதுதான் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறினார்.
சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையைத் தூண்டி அதன் மூலம் தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் செயலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் பாசறை சார்பில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் 31/12/2012 அன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மகளிரணி செயலர் அமராவதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் பேபி, மாலதி, ஐஸ்வர்யா, பத்மா, சந்திரா, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவி சுந்தராம்பாள் வரவேற்றார்.
கண்டன ஆர்பாட்டத்தில் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:
டில்லியில் பாலியல் வன்முறை செய்யப்பட்டு மாணவி இறந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவி சோனியா ஆகியோரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டது. தமிழகத்தில் விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி என பல பகுதிகளிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் காமக்கொடூரர்களால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும். ஆசிரியர்களால் மாணவிகள் கற்பழிக்கப்படுகின்றனர். காதல் இல்லாத சினிமா இல்லை. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கற்பழிப்புக்கு அடிப்படைக் காரணம் மது. மதுவை ஒழிக்க பெண்கள் போராட வேண்டும். பெண் பிள்ளைகளை, தனியாக டிவி பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது .இவ்வாறு வேல்முருகன் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக