Blogger இயக்குவது.

புதுவையில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மறியல் போராட்டம்

சனி, 5 ஜனவரி, 2013

புதுவையில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யபட்டதை கண்டித்தும்,  குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் திரு. ஸ்ரீதர் தலைமையில் புதுவை ராசா திரை அரங்கம் முன் மறியல் போராட்டம் 04/01/2013 அன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தின் பொது தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த நூற்று கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  






Read more...

கம்மாபுரம் ஒன்றியத்திலுள்ள ஏரி, குளங்கள், நீர்வழி வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி முதல்வருக்கு மனு

வியாழன், 3 ஜனவரி, 2013

விருத்தாசலம்:

   கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திலுள்ள ஏரி, குளங்கள், நீர்வழி வாய்க்கால்களை தூர்வார வேண்டும்  என தமிழக வாழ்வுரிமைக்  கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து  கம்மாபுரம் ஒன்றிய செயலாளர்  தியாகராஜன், முதல்வருக்கு அனுப்பியுள்ள  மனு விபரம் :

        1. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றிய விவசாயிகளை பாதுகாக்க மும்முனை மின்சாரம் கூடுதல் நேரம் வழங்க வேண்டும்.

         2. கரும்பு டன்னுக்கு 3,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் வழங்க வேண்டும்.

        3. கம்மாபுரம் ஒன்றியத்திலுள்ள  ஏரி, குளங்கள் மற்றும் நீர்வழி வாய்க்கால்களை தூர்வாரி பாசன வசதியை மேம்படுத்த வேண்டும்.

         4. விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு கிடைக்கும்  மானியங்களில் இடைத்தரகர்கள் தலையீட்டை தடுக்க வேண்டும்.

         5. வி.குமாரமங்கலம் அருகே கட்டப்படும் அணைக்கட்டு பணிக்காக மணிமுக்தாற்றிலிருந்து மணலை  எடுத்து, நிலத்தடி நீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவோர், விலையில்லா நலத்திட்ட உதவிகளை வழங்க பணம் பெறும் ஊராட்சி தலைவர்கள், உடந்தையாக உள்ள அதிகாரிகள், நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு செய்யும் ஊராட்சி
தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

        6. மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த, கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்.

Read more...

முசிறி ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா மற்றும் மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா

புதன், 2 ஜனவரி, 2013

தா.பேட்டை:

       முசிறி ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி கொடியேற்று விழா மற்றும் மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

      திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் முத்து, மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகரத்தினம் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் சரோஜா வரவேற்றார். கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காமராசு, மாநில துணை அமைப்பு செயலாளர் ரவி ஆகியோர், முசிறி, அய்யம்பாளையம், ஏவூர், பெரமூர், சித்தாம்பூர், மணப்பாளையம் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கினர். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் முசிறி ராஜா, தொட்டியம் சுப்ரமணியன், கிளை தலைவர்கள் ஏவூர் கதிர்வேல், பெரமூர் விஜயகுமார், முசிறி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகனை 2012 - ம் ஆண்டின் செய்தி நாயகர் என இந்தியா டுடே (India Today) தேர்ந்தெடுப்பு

முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவு:
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை இந்தியா டுடே வார இதழ் 2012ம் ஆண்டின் செய்தி நாயகர் என தேர்ந்தெடுத்துள்ளது அது குறித்து இந்த வார இந்தியா டுடே இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி








Read more...

பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையைத் தூண்டும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்சிகள் செயலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

கடலூர்:

       பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் மதுதான் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறினார்.

      சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமையைத் தூண்டி அதன் மூலம் தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் செயலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் பாசறை சார்பில் கடலூர்  ஆட்சியர்  அலுவலகம் எதிரில் 31/12/2012 அன்று  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மகளிரணி செயலர் அமராவதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் பேபி, மாலதி, ஐஸ்வர்யா, பத்மா, சந்திரா, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவி சுந்தராம்பாள் வரவேற்றார்.

கண்டன ஆர்பாட்டத்தில் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

       டில்லியில் பாலியல் வன்முறை செய்யப்பட்டு மாணவி இறந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவி சோனியா ஆகியோரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டது. தமிழகத்தில் விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி என பல பகுதிகளிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் காமக்கொடூரர்களால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும். ஆசிரியர்களால் மாணவிகள் கற்பழிக்கப்படுகின்றனர். காதல் இல்லாத சினிமா இல்லை. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கற்பழிப்புக்கு அடிப்படைக் காரணம் மது. மதுவை ஒழிக்க பெண்கள் போராட வேண்டும். பெண் பிள்ளைகளை, தனியாக டிவி பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது .இவ்வாறு வேல்முருகன் பேசினார்.








Read more...

தமிழ்க் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆரப்பாட்டம்

சனி, 29 டிசம்பர், 2012




பெண்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளைத் தூண்டி அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சீர் அழிக்கும் செயலைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்ற உள்ளார்.



இடம்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்.



நாள்: 31/12/2012, திங்கட்கிழமை.


நேரம் : காலை 9.00 மணி

Read more...

ஜூனியர் விகடனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் அவர்களின் சிறப்பு பேட்டி

புதன், 26 டிசம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 26-12-2012 முதல் 9-1-2013 வரை பேசுகிறார்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :  044 - 66802919


Read more...

கம்மாபுரம் ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

திங்கள், 24 டிசம்பர், 2012

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்தில் 23/12/2012 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.  இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கம்மாபுரம், முதனை உள்ளிட்ட  இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியினை  ஏற்றி வைத்தார். 









Read more...

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணம் அமைத்து தர வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

சேலம்:

         சேலம் மேற்கு தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 23/12/2012 அன்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணம்  அமைத்து  தர வேண்டும்  உள்ளிட்ட பல தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.  







Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சனி, 22 டிசம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 23/12/2012 அன்று நடைபெற உள்ளது. 


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP