Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

திங்கள், 23 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 22.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி அளவில் மேச்சேரி விஜயா மஹாலில் நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் ஓ.கே.வீராசாமி தலைமை வகித்தார். மேச்சேரி ஒன்றியச் செயலர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்புச் செயலாளர் மே.ப.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர் செந்தில்குமார், மாநிலப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தி, சேலம் மாவட்டப் பொருளாளர் ஜமுனா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திக், சபரீஷ், செயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலம் போஸ் திடலில் நடைபெறும் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் 5ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் 22.12.2013 அன்று நடைபெறும்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொது குழுக் கூட்டம் 22.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி அளவில் மேச்சேரி விஜயா மஹாலில் நடைபெறும். இதில் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Read more...

திருப்பதி அருகே வன அதிகாரி கொலையில் அப்பாவி தமிழர்களைக் கைது செய்வதை கைவிட வேண்டும் என ஆந்திர காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

புதன், 18 டிசம்பர், 2013

திருப்பதி அருகே வன அதிகாரி கொலையில் அப்பாவி தமிழர்களைக் கைது செய்வதை கைவிட வேண்டும் என ஆந்திர காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் செவ்வாய்க்கிழமை (17.12.2013) வெளியிட்ட அறிக்கை:

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலை தடுக்கச் சென்ற வனத்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கடத்தல்காரர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் அதிகமானவர்களை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் தவிர, அன்றைய தினம் திருப்பதி கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர்கள், ரயில் நிலையத்தில் நின்றவர்கள் என 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்வதாக தகவல்கள் வந்துள்ளன.

உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வதில் ஆட்சேபனை  கிடையாது. ஆனால் அப்பாவி தமிழர்களை சித்ரவதை செய்வதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Read more...

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா மற்றும் பொதுக் கூட்டம்

திங்கள், 16 டிசம்பர், 2013

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா மற்றும் பொதுக் கூட்டம் 15.12.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.

பல்லவராயநத்தம் அங்காளம்மன்கோயில் அருகே நடந்த கொடியேற்று விழாவில் மாநில நிர்வாகக் குழுத் தலைவர் தி.திருமால்வளவன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பின்னர் சுந்தரவாண்டி, எய்தனூர், கே.ஏ.நத்தம், அகரம், சித்தரசூர், சின்னப்பகண்டை உள்ளிட்ட கிராமங்களில் கொடியேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து மாலை ராசாப்பாளையத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கொடியேற்று விழாவில் மாநில துணைத் தலைவர் சக்திவேல், மாவட்டச் செயலாளர் இரா.பஞ்சமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் இரா.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.




Read more...

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் மாநில தலைவர் வேல்முருகனுக்கு முழு அதிகாரம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் போரூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 14.12.2013 (சனிக்கிழமை) மதியம் 2.00 மணி அளவில்  நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் காவேரி, அமைப்பு செயலாளர் இணை பொதுச் செயலாளர் சண்முகம், மாநில துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் இறந்த கால்நடைகளை கணக்கெடுத்து உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

2. தமிழக அரசு கால்நடை மருத்துவர்களை கொண்டு அனைத்து கிராமப் பகுதிகளிலும் கோமாரி நோய்த் தடுப்பு சிறப்பு முகாம் உடனடியாக நடத்திட வேண்டும்.

3. 2.2.2014 அன்று கட்சி துவங்கி 3-ஆம் ஆண்டு துவக்கத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதால் இந்த நிகழ்ச்சியை சேலத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்துதல்.

4. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் மாநில தலைவர் வேல்முருகனுக்கு முழு அதிகாரம் வழங்குவது

உள்ளிட்ட 9 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

Read more...

தமிழகத்தில் கோமாரி நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கால்நடைகளிடையே வேகமாக பரவி வரும் கோமாரி நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோமாரி நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்  கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் (14-12-2013) சனிக்கிழமையன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் பேசியது:

தமிழகத்தில் கோமாரி நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு நிவாரணமாக அதிகபட்சம் 20,000.00 ரூபாயும், குறைந்தபட்சம் 10,000.00 ரூபாயும், கோமாரி நோய் தாக்கி இறந்த ஆடுகளுக்கு நிவாரணமாக அதிகபட்சம் 10,000.00 ரூபாயும், குறைந்தபட்சம் 5,000.00 ரூபாயும் தமிழக அரசு வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.





Read more...

கடலூர் சிப்காட் DFE பார்மா தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

புதன், 11 டிசம்பர், 2013

கடலூர் முதுநகர் அருகே குடிகாட்டில் உள்ள சிப்காட் வளாகத்தில் மருந்து மூலப்பொருட்கள் தயாரிக்கும் DFE பார்மா தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிலாளர் வாழ்வுரிமை சங்க தலைவர் வேலு, செயலாளர் விஜயகுமார், துணை செயலாளர் பிரகாஷ், சாமிதுரை, ஏழுமலை ஆகிய 5 பேர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 5 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நேற்று (10.12.2013) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DFE பார்மா தொழிற்சாலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகக்குழு தலைவர் தி.திருமால்வளவன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, நகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி செந்தில், மாணவரணி அருள்பாபு, தமிழர்படை பிரசன்னா உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் DFE பார்மா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



Read more...

ஈரோடு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அலுவலகம் திறப்புவிழா

செவ்வாய், 10 டிசம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு மாவட்ட அலுவலகம் திறப்புவிழா 07.12.2013 அன்று நடைபெற்றது. விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தார். மாநில அமைப்பாளர் காமராஜ் பங்கேற்றார்.









Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP