கடலூர் சிப்காட் DFE பார்மா தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
புதன், 11 டிசம்பர், 2013
கடலூர் முதுநகர் அருகே குடிகாட்டில் உள்ள
சிப்காட் வளாகத்தில் மருந்து மூலப்பொருட்கள் தயாரிக்கும் DFE பார்மா
தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிலாளர்
வாழ்வுரிமை சங்க தலைவர் வேலு, செயலாளர் விஜயகுமார், துணை செயலாளர் பிரகாஷ்,
சாமிதுரை, ஏழுமலை ஆகிய 5 பேர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம்
செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட 5 தொழிலாளர்களை மீண்டும் பணியில்
சேர்க்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நேற்று
(10.12.2013) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
DFE பார்மா தொழிற்சாலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகக்குழு தலைவர் தி.திருமால்வளவன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, நகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி செந்தில், மாணவரணி அருள்பாபு, தமிழர்படை பிரசன்னா உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் DFE பார்மா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக