Blogger இயக்குவது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஜூலை 16-ம் தேதி முற்றுகைப் போராட்டம்

வெள்ளி, 5 ஜூலை, 2013

சிதம்பரம்:

சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள தில்லை கோவிந்தராஜா திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக் கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கோவி.தில்லைநாயகம் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆர்.ஜி.தமிழ்வாணன், ச.கோபு, என்.எஸ்.டி.தில்லை, எம்.கஜேந்திரன், சி.கரிகாலன், ஆண்டவர் செல்வம், கு.ப.சங்கர், கி.பரசுராமன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச்செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் ஆ.கணேசன், ஆ.ரமேஷ், ச.கா.ராஜேந்திரன், மு.பாலகுருசாமி, மு.ஆளவந்தார். ராதாதிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரத் தலைவர் கே.என்.சிவபாலன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ள மத்தியஅரசை கண்டித்து ஜூலை 16-ம் தேதி நெய்வேலியில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது,

2. தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் நீர், மின்சாரம் தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முழு அரசியல் அதிகார பகிர்வு கிடைக்க வேண்டி பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது,

3. புதிதாக கட்டப்பட்டுள்ள சிதம்பரம் நகர காவல் நிலையத்தை திறக்க தமிழகஅரசை வலியுறுத்துவது,

4. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை துரிதப்படுத்தும் தமிழக அரசை பாராட்டுவது,

5. தமிழகஅரசு நிர்ணயித்த கல்வி கட்டமத்தை வாங்க மறுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பது,

6. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் உள்ளூர் மாணவர்களுக்கு அனுமதி சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP