Blogger இயக்குவது.

என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை முடிவை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை தீவிரப்படுத்தும்: பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

புதன், 10 ஜூலை, 2013

என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை முடிவை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை தீவிரப்படுத்தும்: பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

கண்டன ஆர்ப்பாட்டம்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதை கண்டித்தும், உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்யக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வட்டம் 19–ல் உள்ள தபால் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை  09/07/2013 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, நகர செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் கண்ணன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, சின்னதுரை, முடிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.ஆர்ப்பாட்டத்தில் கடலூர் நகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், கேசவபெருமாள், தொழிலாளர் வாழ்வுரிமை சங்க நிர்வாகிகள் வேல்முருகன், வடிவுசிகாமணி, ஞானவேல், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சண்முகம் உட்ட பலர் கலந்து கொண்டார். முடிவில் இளங்கோவன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் கலந்து கொண்டு பேசியது:

ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிப்பு:


மத்திய அரசு கடந்த 17 ஆண்டுகளில் 16 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. அதில் என்.எல்.சி. நிறுவனத்தின் ஒரு அங்கமாக இயங்கி வந்த உரத்தொழிற்சாலையை மூடிவிட்டது. என்.எல்.சி. நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுமே என்பதற்காகத்தான் தமிழக வாழ்வுரிமை கட்சி களத்தில் நிற்கிறது. என்.எல்.சி. தொழிலாளர்கள் ஒரே குடையின் கீழ் வாருங்கள் நாம் சேர்ந்து போராடுவோம். ஒரு பிரச்சினையை கையில் எடுத்தால், அதில் வெற்றி பெறும் வரை உறுதியாக நிற்க வேண்டும். இது தான் தொழிலாளர் வர்க்கம்.

போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்:


2006–ல் மத்திய அரசு இதுபோன்ற முடிவை எடுத்த போது, நானும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் போராடி தடுத்து நிறுத்தினோம். அதேபோல் இப்போதும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை முடிவை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை தீவிரப்படுத்தும். மத்திய அரசு தொடர்ந்து மெத்தனபோக்கை கடைபிடித்தால், அடுத்தக்கட்டமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை திரட்டி என்.எல்.சி. நிறுவனத்தை ஸ்தம்பிக்க செய்வேன். என்.எல்.சி.யில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இவர்களது பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை என்.எல்.சி. நிறுவனம் அமுல்படுத்த வேண்டி, அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம்.

ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம்:


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அடுத்த வாரம் முற்றுகையிட உள்ளது. மேலும் தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை ராணுவத்தினர் தாக்கி வருவதை கண்டித்து கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP