திருச்சியில் புறநகர் பகுதிகளிலும் அம்மா உணவகம் துவங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை
வியாழன், 25 ஜூலை, 2013
தா.பேட்டை :
திருச்சி வடக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முசிறியில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் ரகுபதி வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் கட்சியின் வளர்ச்சி பற்றி விளக்கி பேசினார். மாவட்ட இளைஞர் அணி பாசறை செயலாளர் சுரேஷ் ராஜா, ஒன்றிய அமைப்பாளர்கள் வேல்முருகன், செல்வகணபதி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொட்டியம் ஒன்றிய செயலாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை முசிறி, தொட்டியம், துறையூர், தா.பேட்டை, மண்ணச்சநல்லூர் ஆகிய தாலுகா பகுதிகளிலும் தொடங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது,
2. முசிறி பேரூராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,
3. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகளில் முசிறி பயணிகளை ஏற்ற மறுக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களின் செயல்பாட்டை கண்டிப்பது
உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக