Blogger இயக்குவது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி ஆகஸ்ட் 5-ம் தேதி அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 20 ஜூலை, 2013

கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி ஆகஸ்ட் 5-ம் தேதி அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் த.செ.மணி, தமிழக வாழ்வுரிமை
க் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியது:-

உலகில் பல நாடுகள் அணு உலைகளை மூடி வருகின்றன. பாதுகாப்பற்ற காரணங்களுக்காக 404 அணு உலைகள் உலகளவில் மூடப்பட்டுள்ளன. ஆனால் கூடங்குளத்தில் 6 அணு உலைகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தமிழர்களை அழிக்கும் திட்டம். இந்தியாவில் உள்ள 59 விஞ்ஞானிகள் அணு உலைகள் அமைப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல் உம்மன்சாண்டி ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அணு உலை அமைப்பதற்காக பொருள்கள் வாங்கியதில் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனால் பொருள்கள் தரமற்றவையாக இருக்க வாய்ப்பிருப்பதால், அது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 1 யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கு கடலில் இருந்து 600 கோடி லிட்டர் எடுக்க வேண்டியிருக்கும். இந்தத் தண்ணீரை முழு கொதிநிலைக்கு உள்ளாக்கிய பிறகு, மீண்டும் கடலிலேயே விடுவதால் மீன்வளம் பாதிக்கப்படும். எனவே கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ கூறினார். 





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP