சேலத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் இரங்கல்
திங்கள், 22 ஜூலை, 2013
சேலத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தமிழக அரசுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். இந்த கொலை எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்ட பஞ்சாயத்தோ, வன்முறை அரசியலோ செய்யாமல், அமைதி வழியில் அரசியல் நடத்திய அகிம்சைவாதிக்கு தான் தண்டனையா? ஒரு நல்ல அரசியல்வாதிக்கு நடந்திருக்கும் இந்த நிகழ்வை தமிழக மக்கள் மட்டும் அல்லாமல் இந்திய மக்களும் மன்னிக்க மாட்டார்கள். எந்த காரணத்திற்காக இந்த கொலை நடந்திருந்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றமாக கருதி குற்றம் செய்தவர்களையும், குற்றம் செய்ய துண்டியவர்களுக்கும் தமிழக அரசு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
அவருடைய மறைவால் வாடும் அவரது மனைவி சுபா, மகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக