Blogger இயக்குவது.

கடலூர் நகர பாதாள சாக்கடைத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நகர நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 8 ஜூலை, 2013

கடலூர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நகர நிர்வாகக்குழு கூட்டம் கடலூர் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07/07/2013) அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் ராஜேஷ்பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சத்யாமுருகன், துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், வக்கீல் லெனின், இளைஞரணி தண்டபாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஆனந்த் வரவேற்றார். கூட்டத்தில் மாநில நிர்வாகக்குழு தலைவர் தி. திருமால்வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.  மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மகளிர்அணி அமராவதி, மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, இளம்புயல் பாசறை கமலநாதன், தமிழர்படை பிரசன்னகுமார், இளைஞரணி செந்தில், மாணவர்அணி அருள்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசை கண்டித்து வருகிற 9-ந்தேதி (செவ்வாய்கிழமை) நெய்வேலியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் நகரம் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது.

2.  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்வது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாமல் உள்ள நிர்வாகத்தை கண்டிப்பது.

3. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவடையாததால் ரோடுகளில் குண்டும், குழியுமான சாலையினால் விபத்துகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது. ஆகையால் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்பட கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற்ப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP