Blogger இயக்குவது.

பெரியகுளம் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்படுவதால் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிறு, 22 மார்ச், 2015

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தேனி மாவட்ட செயலாளர் பிரியா முருகேஸ்வரி தலைமை வகித்தார். பொருளாளர் அப்துல்கபூர் வரவேற்றார். தேனி மாவட்ட துணைச் செயலாளர் ஹக்கீம்சேட் நன்றி கூறினார். பெரியகுளம் ஒன்றியத் தலைவர் கௌஸ்பாட்ஷா, தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் கணேசன், தேனி மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியகுளம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை உள்ளது, நோயாளிகள் சிரமப்படுவதால் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும், பெரியகுளம் ஒன்றியம் அழகர்சாமிபுரத்தில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் நடைபெற்றது

புதன், 18 மார்ச், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் ரவி அலெக்ஸ் முன்னிலை வகித்தார். மாநில தொழிற்சங்க பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில துணை தலைவர் சசிகுமார், மாவட்ட துணை செயலாளர் டேவிட், ஒன்றிய செயலாளர்கள் சாய்கமல், அய்யனார், சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, சேட்டு, பாலாஜி, பலராமன், மணிகண்டன், ஜெகதீசன், இளைஞரணி தினேஷ், தீனா உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 20ம் தேதி, விழுப்புரத்தில் நடக்கும் பொது கூட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆணவப் பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்

செவ்வாய், 17 மார்ச், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இன்று 17.03.2015 வெளியிட்டுள அறிக்கை: 

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம்- ரணிலின் ஆணவப் பேச்சுக்கு மத்திய அரசே முடிவு கட்டு!!
தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது வழக்கு தொடருக!!
தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் கொக்கரித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அண்மைக்காலமாக தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இத்தகைய கொலைவெறிக் கருத்தை வெளிப்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்னர் இதேபோல் ரணில் விக்கிரமசிங்கே கருத்து தெரிவித்த போது, இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரிடம் விளக்கம் கேட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் இதே கருத்தை சுஷ்மா ஸ்வராஜ் பதிவு செய்தார். 

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் அதே கொலைவெறித்தனத்தோடு இந்திய ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். இப்போதும் மத்திய அரசு மவுனமாக இருக்கப் போகிறதா? இப்போதும் இந்திய நாட்டின் குடிமக்களாகிய தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்ற ரணிலின் அறிவிப்புக்கு சப்பைக் கட்டு காரணத்தை மத்திய அரசு சொல்லப் போகிறதா? ரணிலின் இந்த கருத்தைக் கண்டிக்கும் வகையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்; அத்துடன் தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது மத்திய அரசு வழக்குத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும். 

இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போவதில்லை; இலங்கையின் இத்தகைய இனவெறிப் போக்குக்கு சரியான பாடம் கற்பிக்க தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட "இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்ற தீர்மானத்தை மத்திய அரசு இனியாவது ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

கடலூர் அடுத்த பச்சையாங்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிராம பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்புக் கூட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிராம பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்புக் கூட்டம் கடலூர் அடுத்த பச்சையாங்குப்பத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய அமைப்பாளர் ரிச்சர்ட் தேவநாதன் தலைமை தாங்கினார். ஜெகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு பேசினர். வீரப்பன், சதீஷ், ரமேஷ், சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கடலூர் கிழக்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் பிரபு நன்றி கூறினார்.
கூட்டத்தில், சிப்காட் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழுக் கூட்டம்

விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் முத்துராமன் வரவேற்றார். ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னதுரை சிறப்புரையாற்றினார். விருத்தாசலம் மேற்கு ஒன்றியச் செயலர் வெங்கிடாசலம், நகர இளைரஞரணி தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் நீலகண்டன், நிர்வாகிகள் அதிரதன், ஜெய்சங்கர், ஞானவேல், பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில், 

கானாதுகண்டான் கிராமத்தில் இயங்கி வரும் எரிசாராய ஆலையால், அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொழிலதிபர் அரவிந்த், ஐ.பி.எல்.20 கிரிக்கெட் வீரர் தலைவன் சற்குணம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

வியாழன், 12 மார்ச், 2015

சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் சங்கத்தில் 12.03.2015 அன்று நடந்த இணைப்பு விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் முன்னிலையில் தொழிலதிபர் திரு.அரவிந்த் மற்றும் IPL T 20 கிரிக்கெட் வீரர் திரு.தலைவன் சற்குணம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.








காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

புதன், 11 மார்ச், 2015

காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 11.3.2015 அன்றுனடைபெற்றது.

முற்றுகையிடும் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலர் வைகோ,  திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் சுப. உதயகுமார், தமிழ்ப் புலிகள் குடந்தை அரசன் உட்பட காவிரி பாதுகாப்பு இயக்கத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 





தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 14.03.2015 அன்று நடைபெற உள்ளது

செவ்வாய், 10 மார்ச், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 14.03.2015 அன்று காலை10.00 மணிக்கு கும்பகோணம் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.   


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் 200 மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

திங்கள், 9 மார்ச், 2015

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் 09.03.2015 இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். 

இடம் : சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகம் .







கடலூர் மாவட்டம் கொஞ்சிகுப்பம், சிறுதொண்டமாதேவி, பண்ருட்டி பகுதிகளில் இருந்து 150 மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

ஞாயிறு, 8 மார்ச், 2015

கடலூர் மாவட்டம் கொஞ்சிகுப்பம், சிறுதொண்டமாதேவி, பண்ருட்டி பகுதிகளில் இருந்து 150 மேற்பட்ட இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் மிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். 















தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

வியாழன், 5 மார்ச், 2015

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 05.03.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம்" என கொக்கரிக்கும் சிங்கள பேரினவாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கண்டனம்

பாக் நீரிணைப் பகுதியில் இலங்கை எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இலங்கையின் பிரதமர் சிங்களப் பேரினவாதி ரணில் விக்கிரமசிங்கே கொக்கரித்திருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
1974 ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தத்தில் பிரிவு 5 மற்றும் 6-ல் "கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் பாரம்பரிய உரிமைகளில் மீன்பிடிக்கலாம்; எந்தத் தடையும் இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம் மதிக்காத சிங்களப் பேரினவாத அரசுகள், எல்லை தாண்டினார்கள் என்ற ஒற்றை பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் உலகில் எங்குமே இல்லாத பெருங்கொடுமையாக 30 ஆண்டுகாலமாக தமிழக மீனவ உறவுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 700க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்திருக்கிறது. 

இன்று வரை தமிழக மீனவர்களை நடுக்கடலில் விரட்டியடிப்பது; தாக்குவது, சித்தரவதை செய்வது; படகுகளை பறிமுதல் செய்வது என சிங்கள ராணுவம் வெறியாட்டம் போடுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி 700க்கும் அதிகமான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள வெறியாட்டத்தை நியாயப்படுத்துகிற வகையில் "இவையெல்லாம் ஆயுதக் கடத்தலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்" என்று ரணில் விக்கிரமசிங்கே பேட்டியளித்திருப்பது கண்டனத்துக்குரியது. ரணில் விக்கிரமசிங்கேவின் இக்கருத்து தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. 

வாழ்வாதாரத்துக்காக நித்தம் நித்தம் செத்து பிழைத்து கடலில் தொழிலுக்குப் போகிற மீனவர்களை "ஆயுதக் கடத்தல்காரர்கள்; போதைப் பொருள் கடத்தல்காரர்கள்" என்று ரணிலைப் போன்ற சிங்கள பேரினவாதிகள் போகிற போக்கில் கொச்சைப்படுத்துவது கடுமையான கண்டனத்துக்குரியது.

பாக் நீரிணைப் பகுதியில் மீனவர்கள் எல்லை தாண்டி செல்லக் கூடாது என்று 1983ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு ஒரு தற்காலிகத் தடை விதித்தது. அந்தத் தடையை நீக்குவதன் மூலமாக 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன்பிடிக்க உரிமை உண்டு என்பதை மத்திய அரசு நிலைநாட்டுவது உடனடித் தேவையாகும்.

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதிகளில் மீன்பிடிப்பது என்பது எப்படி எல்லை தாண்டி வருவதாகும்? அப்படி வருபவர்களை சுட்டுத் தள்ள சட்டத்தில் இடம் இருக்கிறது என்று மிரட்டுகிற ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இந்திய மத்திய அரசு தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். எல்லை தாண்டுவதாக கூறி காக்கை குருவிகளைப் போல 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படை மீது இந்திய மத்திய அரசு வழக்கு தொடர வேண்டும்.

இலங்கைக்கு செல்ல இருக்கிற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரணில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்திக்கும் போதும் தம்முடைய கண்டனத்தை பதிவு செய்வதுடன் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர், 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Pages (26)123456 Next

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP