பெரியகுளம் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்படுவதால் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
ஞாயிறு, 22 மார்ச், 2015
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தேனி மாவட்ட செயலாளர் பிரியா முருகேஸ்வரி தலைமை வகித்தார். பொருளாளர் அப்துல்கபூர் வரவேற்றார். தேனி மாவட்ட துணைச் செயலாளர் ஹக்கீம்சேட் நன்றி கூறினார். பெரியகுளம் ஒன்றியத் தலைவர் கௌஸ்பாட்ஷா, தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் கணேசன், தேனி மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை உள்ளது, நோயாளிகள் சிரமப்படுவதால் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும், பெரியகுளம் ஒன்றியம் அழகர்சாமிபுரத்தில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக