தஞ்சையில் இருந்து சென்னைக்கு, சென்னையில் இருந்தும் தஞ்சைக்கு விரைவு ரெயில் இயக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ட
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சையில் 26/08/2013 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் காவேரி தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆர்.பி.தமிழ்நேசன் தொடக்க உரை ஆற்றினார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முத்துமாரியப்பன் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில இணைப்பொது செயலாளர் சண்முகம், அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணை பொது செயலாளர்கள் கனல்கண்ணன், சரவணன், மாநில பொது செயலாளர் சாமிநாதன், துணைப்பொதுச்செயலாளர் சரவணதேவா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முகமதுஆரிப் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். செல்வம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வந்தும் இன்று வரை விவசாயிகள் பயிரிட முடியவில்லை. எனவே பயிர்க்கடன், உரக்கடன், விதைநெல் போன்ற இடுபொருட்களை உடனே வழங்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
2. தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் உள்ள கழவறைகள் சுகாதாரக்கேடுகளுடன் உள்ளன. எனவே சரிவர பராமரிக்காத கழிவறைகளின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மறு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் நகராட்சியே நடத்த வேண்டும்.
3. தஞ்சையில் இருந்து சென்னைக்கு, சென்னையில் இருந்தும் தஞ்சைக்கு விரைவு ரெயில் உடனே அறிவிக்க வேண்டும். தஞ்சையில் இருந்த முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும்.
4. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் காய்கறி வணிக சந்தை அமைக்க வேண்டும்.
5. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், ஒன்றியம் வாரியாக கிளை கூட்டங்கள் நடத்தி கொடியேற்று விழா நடத்துவது
என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
லேபிள்கள்:
தஞ்சை மாவட்டம்,
தமிழ்நேசன்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மெட்ராஸ் கபே திரைப்படத்தை தமிழ்நாட்டில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013
மெட்ராஸ் கபே திரைப்படத்தை தமிழ்நாட்டில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறி உள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத் தமிழர்களின் ஈழ விடுதலையை கொச்சைப்படுத்தி ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தை வெளியிடுவதை படத்தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும். இந்த படத்தை மீறி வெளியிட முயற்சித்தால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்கள் அதனை தடுத்து நிறுத்துவார்கள் என்று எச்சரிக்கிறோம்.

மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தூத்துக்குடி வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் குறித்து நாளேடுகளில் வந்துள்ள செய்திகள்
புதன், 21 ஆகஸ்ட், 2013
தனியாரிடம் உள்ள தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை
அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டு
வரும் தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை
கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 20.08.2013 அன்று
தூத்துக்குடியில் நடைபெற்ற வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும்
போராட்டம் குறித்து நாளேடுகளில் வந்துள்ள செய்திகளின் தொகுப்பு
லேபிள்கள்:
டாக் தொழிற்சாலை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
முற்றுகைப் போராட்டம்
தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை
தானே
புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்
கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழக அரசு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தி வருகிறது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயல் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதியை வழங்கி உதவுமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ரூபாய் ஓரு லட்சம் வழங்கிய நிதியை ரூபாய் ஓரு லட்சத்து இருபதாயிரம் ஆகவும், முதலமைச்சரின் சூரியசக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கு ரூபாய் ஓரு லட்சத்து என்பதாயிரமாக இருந்ததை ரூபாய் முப்பதாயிரம் உயர்த்தி ரூபாய் இரண்டு லட்சத்து பத்தாயிரமாக வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு, தானே புயல் வீடு கட்டும் திட்டத்திற்கு ஓதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. வீடு கட்டுபவரே தனது உடல் உழைப்பை கொடுத்தும், கட்டுமான பொருள்களின் விலை உயர்வினால் வீடு கட்ட இந்த நிதி போதாது. எனவே தமிழக அரசு கூடுதலாக ரூபாய் ஐம்பதாயிரம் ஓதுக்கி ரூபாய் ஓரு லட்சத்து ஐம்பதாயிரம்மாக வழங்க வேண்டுமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
என்.எல்.சிக்கு வீடு நிலம் கொடுத்து தானே புயலில் பாதிக்கப்பட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு என்.எல்.சி நிறுவனம் எந்த நிதி உதவியும் இது வரை வழங்கவில்லை. எனவே தானே புயல் வீடு கட்டும் பயனாளிகளுக்கு என்.எல்.சி நிறுவனம் கூடுதலாக ரூபாய் ஓரு லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
லேபிள்கள்:
கடலூர் மாவட்டம்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
தானே புயல்,
தி.வேல்முருகன்
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தாத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வணிகவரித் துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013
தனியாரிடம் உள்ள தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுவரும் தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று 20.08.2013 காலை 11.00 மணி அளவில் நடந்தது. போராட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார்.
முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவதுடன், ஜனநாயகத்திற்கு விரோதமாக கொடுமையாக தாக்கப்பட்டு வருகின்றனர். மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு இதுவரை எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இலங்கை ராணுவத்தினை கண்டிக்காத மத்திய அரசு மீனவர்கள் தங்ளைத்தானே பாதுகாத்துக்கொள்ள அவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும். மேலும் தமிழக மீனவர்களை பாதுகாத்திட கச்சத்தீவை மீட்கவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களால் துவங்கப்பட்ட டாக் தொழிற்சாலை கடந்த 6மாத காலமாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில் இதனை நம்பி வாழ்ந்துவரும் மறைமுக தொழிலாளர்கள் என 3ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்தவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் தாதுமணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளது. ஆய்வுக்குழு கொடுக்கும் அறிக்கையினை பெற்று அரசு சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், அவர்கள் முறைகேடாக சம்பாதித்த அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும். இந்த ஆய்வு வெறும் கண்துடைப்பாக இல்லாமல் தவறு செய்தவர்களுக்கு பாடமாகவும், படிப்பினையாகவும் இருக்கவேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து வேல்முருகன் தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து வருமானவரித்துறை அலுவலக
முற்றுகைப் போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் காவேரி வை.காவேரி, மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன், மாநில இளைஞசரணி தலைவர் ரவிபிரகாஷ் உள்ளிட் முயன்ற ஆயிரக்கணக்கானோரை டி.எஸ்.பி.பெஸ்கி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,
முற்றுகைப் போராட்டம்
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தாத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 20/08/2013 அன்று தூத்துக்குடி மத்திய அரசின் வணிகவரி அலுவலக முன் கண்டன முற்றுகைப் போராட்டம்
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தாத மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடியில் கண்டன முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
1974 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திராகாந்தி, ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததால் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்தனர், என்ற குற்றம் சாட்டி இலங்கைக் கடற்படையினரால் இதுவரையில் 600க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர், 400க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, தமிழக அரசின் நெருக்கடியினால் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி விடு விக்கப்பட்டுள்ளனர், விவசாயிகள் , வணிகர்கள் மற்றும் அரசு பணியாளர்கள், இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட போதிலும் அந்நிய நாட்டாரின் அச்சுறுத்தலின்றி அமைதியான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் கடல் நீரையே வாழ்க்கையின் ஜுவாதாரமாகக் கொண்டு நடுராத்திரியில் மீன் பிடிக்கச் செல்லும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி விட்டனர் என்று இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், மீன்பிடி படகுகள் அடித்து நொருக்கப்படுவதும், மீனவர்கள், தாக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இராசபக்சேவின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இயங்கி வரும், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்தி,மீனவர்களைக் காப்பாற்றத் தவறியதை வண்மையாகக் கண்டித்து வருகின்ற 20.08.2013ம் தேதியன்று தூத்துக்குடியில் மத்திய அரசின் வணிகவரி அலுவலக முன்பு காலை 11 மணியளவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக கண்டன முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது, இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்களும், இயக்கத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், பங்கேற்று சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
அன்புடன்
தி.வேல்முருகன்
நிறுவனர்

அறிக்கைகள்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
தூத்துக்குடி,
முற்றுகைப் போராட்டம்
Tamizhaga Vaazhvurimai Katchi (TVK) now a registered political party
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013
The Election Commission has registered the Tamizhaga
Vaazhvurimai Katchi (TVK), floated by former MLA T.Velmurugan, as a
registered political party under Section 29A of the Representation of
the People Act 1951. A communication issued by the
Election Commission in this regard was released by Mr Velmurugan to the
presspersons. It states that registration will not entitle the party to
the reservation of any exclusive symbol for it. However,
the candidates duly set up by the party at an election will be entitled
to the benefit of preference in allotment of free symbol over
independent candidates. The party is required to
submit to the Election Commission a report of contribution received in
excess of Rs 20,000 in a financial year in the prescribed format,
quoting the Permanent Account Number. The Election Commission has also informed that it is not concerned with the flags of political parties.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புவனகிரி
மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் 17.8.2013 அன்று மாலை 6 மணி அளவில் கடலூர்
மாவட்டம் சேத்தியாதோப்பு ஜெகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில நிர்வாககுழு உறுப்பினர் தி.திருமால்வளவன், மாநில துணை பொதுச்செயலாளர் உ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநில மாணவர் சங்க தலைவர் இரவி.பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தில்லை, ஒன்றிய தலைவர் இராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகி இராசேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ப.ஆண்டவர்செல்வம், வாசு.சரவணன், எ.கரிகாலன், பேரூர் செயலாளர் கி.பரசுராமன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் இரா.விஜயகுமார், சிதம்பர நகர செயலாளர் தில்லை நாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இரவி.பிரகாஷ்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
தி.திருமால்வளவன்,
புவனகிரி
தமிழின விரோத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் - 300 பேர் கைது
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைக் கண்டித்தும், 65 தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் வைத்துள்ள இலங்கை அரசைக் கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் தமிழின விரோத மத்திய அரசைக் கண்டித்தும், இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும் நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் அவர்களின் தலைமையில் 17.08.2013 (சனிக்கிழமை) மயிலாடுதுறை தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன், சிவா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
லேபிள்கள்:
கருப்பு சரவணன்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
முற்றுகைப் போராட்டம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)