தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 28/08/2013 அன்று தஞ்சையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொள்ள தஞ்சை வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அளித்த பேட்டி:
இலங்கையில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி
படுகொலை செய்த ராஜபக்சேவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், ஈழ பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களின் வாழ்வை அழித்த
இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமை ஏற்று இலங்கையில் நடைபெற இருக்கும்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. இது தொடர்பாக தமிழக
வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் தொடங்க உள்ளது. இந்த பிரசாரம்
தமிழகம் முழுவதும் நடைபெறும்.ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு சென்று உள்ளதை எங்கள் கட்சி வரவேற்கிறது. எனினும் அவர், அங்கு உள்ள ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். இலங்கை
ராணுவத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டு உள்ள
விவரங்களையும் கேட்டறிய வேண்டும். மேலும் அங்கு இலங்கை ராணுவத்தால் கைது
செய்யப்பட்டு சிறையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்களை நேரில் சந்தித்து,
அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்ய மனித உரிமை ஆணைத்தின் மூலம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கையில்
நடைபெறும் கொலை கொடூரங்களை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
மேலும், அங்கு நடைபெறும் போர் குற்றங்கள் குறித்து மனித உரிமை ஆணையத்தின்
மூலம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக