Blogger இயக்குவது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு

சனி, 10 ஆகஸ்ட், 2013

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில்  இன்று 10/08/2013 காலை 10.00 மணி அளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், துணைப்பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ. வேணுகோபால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காவேரி, காமராஜ், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.  பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, மே 16 இயக்க தலைவர் திருமுருகன், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், பாலவாக்கம் சோமு,  கவுன்சிலர் சிமா பசீர், குமரி விஜயகுமார், நன்மாறன், மகரூப்பு, தென்றல், நிசார், பெரம்பூர் ந.பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறியது:


கூடங்குளம் அணுமின் நிலையம் அமைத்தால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நமது சந்ததிகளை அழித்து விடும். எனவே தான் அணு உலை எதிர்ப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். அணு உலையில் இருந்து வெளியேறும் அணு கழிவுகள் கடலில் கொட்டப்படும். இதனால் கடல் வாழ்வாதாரம் பாதிக்கும்.

இலங்கையில் தமிழர்கள் உயிர்களை அழித்தது போதாது என்று மத்திய அரசு மேலும் தமிழர்களின் வாழ்வை சீர் அழிக்க அணு உலை மூலம் முடிவு செய்து உள்ளது. கூடங்குளம் அணு உலை மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் 900 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் தினமும் அங்கிருந்து 140 மெகாவாட்டுக்கு மேல் தர முடியாது என்பது தான் உண்மை. மத்திய மாநில அரசுகள் தமிழக மக்களை ஏமாற்றுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். கூடங்குளம் அணு உலை மூட படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

கடந்த மே 6–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் நிபந்தனைகளை அமல் படுத்தாமல் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்பட தொடங்கி உள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டு உள்ள வழங்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் வாபஸ் பெறவில்லை. தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 59 விஞ்ஞானிகள் பழுதடைந்த கருவிகளின் உதிரி பாகங்கள் கூடங்குளத்தில் பயன்படுத்த படுவதாகவும் அதை அகற்றி விட்டு புதிய உதிரி பாகங்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதை கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP