அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை புகுத்தும் தமிழக அரசு கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 8 ல் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013
தமிழக அரசு நடப்புக் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குகிறது. இத்திட்டதைக் கைவிட வலியுறுத்தி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் தமிழக அரசுக்கு விண்ணப்பம் கொடுக்கும் கோரிக்கைப் பேரணி கோட்டையை நோக்கி 07.08.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
இது குறித்து 05.08.2013 திங்கள்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியிக்க ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவின் பொதுச் செயலாளர் திரு சைதை சிவராமன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அமைப்பு செயலாளர் காமராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் போரூர் சண்முகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் குணங்குடி அனிபா, மே பதினேழு இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைநிலையச் செயலாளர் தபசிகுமரன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அருண்சோரி, தமிழ் உரிமை மீட்பு இயக்கச் செயலாளர் சின்னப்பதமிழர், உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக